தை மாத நட்சத்திர பலன்கள்: அவிட்டம்

Published On:

| By Selvam

நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். இந்த சமயத்தில் கர்வம் அதிகரிக்காமல் தவிர்ப்பது அவசியம்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் வரத்தொடங்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு வாய்ப்பு வரும்.

குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். வீண் பிடிவாதம் ஒருபோதும் வேண்டாம். உறவுகளால் ஆதாயம் உண்டு. வரவு சீராக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சர்ச்சை தவிருங்கள்.

செய்யும் தொழிலில் சுணக்கம் நீங்கும். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம்.

அரசு, அரசியலில் உள்ளோர் சரிவில் இருந்து மீள்வீர்கள். சகவாச தோஷத்தை உடனே உதறுங்கள்.

கலை, படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். திட்டமிட்டலில் பொறுப்பு உணர்வு முக்கியம்.

வாகனப் பயணத்தில் வழிப்பாதை உணவு தவிருங்கள்.

அல்சர், அஜீரணம், ஒவ்வாமை, தலைவலி ஏற்படலாம்.

மகாலக்ஷ்மி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… மகனுடன் கண்டுகளித்த உதயநிதி

தை மாத நட்சத்திர பலன்கள்: திருவோணம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel