தை மாத நட்சத்திர பலன்கள்: மகம்

Published On:

| By Selvam

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

14.1.2025 முதல் 12.2.2025 வரை

நிதானமாகச் செயல்படவேண்டிய காலகட்டம்.

அலுவலகத்தில் நேரடி கவனமும் நேரம் தவறாமையும் முக்கியம். மாற்றங்கள் தாமதமானாலும் பொறுமையே நல்லது.

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும்.

வார்த்தையில் குதர்க்கம் தவிருங்கள்.

வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். வாரிசுகளால் பெருமை உண்டு.

விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். தரல், பெறலை நேரடியாகச் செய்யுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடரும். அதேசமயம் உழைப்பில் சலிப்பு கூடவே கூடாது.

அரசு, அரசியலில் உள்ளோர் தலைகனத்தைத் தவிருங்கள்.

பொது இடங்களில் நிதானம் முக்கியம்.

கலை, படைப்புத் துறையினர் வாய்ப்புகளில் பேதம் பார்க்க வேண்டாம்.

கூடா நட்பை உடனே உதறுங்கள்.

வாகனப் பழுதை உடனே கவனியுங்கள்.

மூட்டு, ரத்த அழுத்த மாற்றம், தலைவலி உபாதைகள் வரலாம்.

தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்.

தேதி குறிச்சாச்சா? – அண்ணாமலைக்கு கீதா ஜீவன் கிடுக்குப்பிடி கேள்வி!

அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி முக்கிய உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel