தை மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை

Published On:

| By Selvam


யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

14.1.2025 முதல் 12.2.2025 வரை

உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக் கூடிய காலகட்டம்.

அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடனிருப்போர் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். இருப்பதை விட்டுப் புதியதைப் பிடிக்க நினைப்பதை மட்டும் தவிருங்கள்.

குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். குழந்தைகளால் பெருமை உண்டு. சுபகாரியத் தடைகள் நீங்கும். சுபிட்சம் வரும் சமயத்தில் சுணக்கமாக உங்கள் வார்த்தைகள் இல்லாமல் இருப்பது நல்லது.

செய்யும் தொழிலில் வளர்ச்சி உருவாகும். புதிய தொழிலமைப்பு கைகூடி வரும். அதில் நேரடி கவனம் முக்கியம்.

அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பிறருக்கு வாக்குறுதி எதுவும் தரவேண்டாம். புறம்பேசுவோரிடம் கவனமாக இருங்கள்.

கலை, படைப்புத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும்.

அயல்நாடு செல்வோர் உரிய தஸ்தாவேஜுகளை பத்திரமாக வையுங்கள்.

வாகனத்தில் வேகம் வேண்டவே வேண்டாம்.

அலர்ஜி, தொற்று உபாதைகள், பல் உபாதைகள் வரலாம்.

இஷ்ட மகான் வழிபாடு கஷ்டங்கள் போக்கும்.

திருவள்ளுவர் தினம்… யார் யாருக்கு என்னென்ன விருது?

தை மாத நட்சத்திர பலன்கள்: ஹஸ்தம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel