யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
14.1.2025 முதல் 12.2.2025 வரை
கவனமாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகப் பொறுப்புகளில் அலட்சியம் கூடாது. பிறர் தவறுகளைப் பெரிதுபடுத்திப் பேசவேண்டாம். கையெழுத்திடுகையில் கவனம் முக்கியம்.
வீட்டில் சீரான போக்கு நிலவும். வார்த்தைகளில் நிதானம் இருக்கட்டும். வாழ்க்கைத்துணை உடல்நலம் சீராகும். வாரிசுகளிடம் தர்க்கம் வேண்டாம். சுபகாரியங்களில் திட்டமிடல் முக்கியம்.
செய்யும் தொழிலில் நேரடி கவனம் செலுத்துங்கள். புதிய முதலீடுகளில் நிதானம் முக்கியம்.
அரசு, அரசியலில் உள்ளவர்கள் அமைதியால் ஆதரவைத் தக்கவைக்கலாம். கனவிலும் சஞ்சலம் கூடவே கூடாது.
கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும். சின்சியராகச் செயல்படுங்கள்.
பயணத்தில் கவனச் சிதறல் கூடாது.
முதுகு, கழுத்து, தோள்பட்டை உபாதைகள் வரலாம்.
துர்க்கை வழிபாடு செழிக்கச் செய்யும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேதி குறிச்சாச்சா? – அண்ணாமலைக்கு கீதா ஜீவன் கிடுக்குப்பிடி கேள்வி!