யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
14.1.2025 முதல் 12.2.2025 வரை
தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் எதிர்பாராத இடமாற்றம் வரலாம். புதிய பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள்.
குடும்பத்தில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். தம்பதியரிடையே மனம்விட்டுப் பேசுங்கள்.
ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்தில் வீண் தர்க்கம் வேண்டாம். முன்னோர் கடன்களை முழுமையாகச் செய்யுங்கள்.
சுபகாரியங்களில் நிதானம் முக்கியம்.
செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ற உயர்வு வரும். பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட் தவிருங்கள்.
அரசு, அரசியல் துறையினருக்கு நிதானமே நிம்மதி தரும்.
மேலிடத்தைக் கனவிலும் குறை சொல்ல வேண்டாம்.
கலை, படைப்புத் துறையினரின் பலகாலக் கனவுகள் ஈடேறும்.
சிற்றின்ப நாட்டம் அறவே தவிருங்கள்.
பயணத்தில் உடைமைகள் பத்திரம்.
காது,மூக்கு,தொண்டை உபாதைகள் வரலாம்.
கணபதி வழிபாடு களிப்பு தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…