தை மாத நட்சத்திர பலன்கள்: பூரம்

Published On:

| By Selvam

அடக்கமாகச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் திட்டமிடல் மிகமிக முக்கியம். பணத்தைக் கையாள்வோர்க்கு அலட்சியம் கூடாது. மேலிடத்துடன் வீண் தர்க்கம் தவிருங்கள்.

குடும்பத்தில் குத்தல் குதர்க்கம் வேண்டாம். தம்பதியரிடையே மனம்விட்டுப் பேசுங்கள். மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். பூர்வீக சொத்தில் விட்டுக்கொடுங்கள். வாரிசுகளிடம் கடுகடுப்பு வேண்டாம்.

செய்யும் தொழிலில் நேரடி கவனம் செலுத்துங்கள். தேவையற்ற சந்தேகம் தவிருங்கள். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாடு முக்கியம்.

அரசு, அரசியலில் உள்ளோர் பொது இடங்களில் அமைதியாக இருங்கள். சஞ்சலம் சபலம் தவிருங்கள்.

கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் நிச்சயம் வரும். முயற்சிகளில் முடங்க வேண்டாம்.

இரவுப் பயணத்தில் நிதானம் முக்கியம்.

தலைவலி, ரத்தநாளம், தொற்று உபாதைகள் வரலாம்.

பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.

நல்லவேளை தப்பிச்சிட்டேன்… அப்டேட் குமாரு

தை மாத நட்சத்திர பலன்கள்: மகம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share