–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
முயற்சி இருந்தால் தடைகள் தகரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். அதேசமயம் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் வேண்டாம். மேலதிகாரிகளிடம் தர்க்கம் தவிருங்கள். குத்தல் பேச்சும் குதர்க்கமும் கூடவே கூடாது.
வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். உறவுகளிடம் விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாழ்க்கைத்துணையிடம் சச்சரவு வேண்டாம். வாரிசுகளால் பெருமை உண்டு.
அசையும், அசையா சொத்து சேரும். வழக்குகள் சாதகமாகத் தீர்வாகும். கடன்களில் நேரடி கவனம் முக்கியம். அக்கம் பக்கத்தில் அதிக நெருக்கம் வேண்டாம். செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப உயர்வு உண்டு.
வர்த்தக அனுமதியைப் பெறுவதில் அலட்சியம் கூடாது. அரசுத்துறையில் உள்ளோருக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். பணி நேரத்தில் வீண் களியாட்டம் தவிருங்கள்.
அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நீடிக்கும். மேலிடத்தின் பாராட்டு கிட்டும். மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கை தேவை. கலைஞர்கள், படைப்பாளிகள் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டலைக் கேளுங்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம். வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். தலைவலி, தூக்கமின்மை, கால்கள், பல் உபாதைகள் வரலாம். குருபகவான் வழிபாடு கோடி நன்மை தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா : போக்குவரத்தில் முக்கிய மாற்றம்!
பாடகி பி.சுசீலாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவர்கள் கொடுக்கும் அப்டேட்!