– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
செயல்களில் நிதானம் இருந்தால், செழிப்புகள் உருவாகும் காலகட்டம். அலுவலத்தில் உங்கள் திறமை உணரப்படும். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும்.
புதிய பொறுப்புகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ப உயர்வுகளும் கிட்டும். மேலதிகாரிகளிடம் பேசும்போது வீண் சலிப்பைத் தவிருங்கள்.
குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். வரவு அதிகரித்தாலும் செலவும் சேர்ந்து வரும். வாழ்க்கைத்துணை வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அக்கம்பக்கத்தினருடன் அதிக நெருக்கம் வேண்டாம். வாரிசுகளால் பெருமை சேரும்.
ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் வளர்ச்சி சீராகும். நேரான செயல்களால் அது மேலும் வளரும். புதிய முதலீட்டில் அவசரம் வேண்டாம். அரசியலில் உள்லவர்கள் யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். பொது இடங்களில் நிதானத்தைக் கடைபிடியுங்கள். அரசுப்பணி புரிபவர்களுக்கு ஆதரவும் ஆதாயமும் அதிகரிக்கும்.
பணியிடக் கோப்புகளை பத்திரமாக வையுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு பெயரும் புகழும் கிட்டும். வாய்ப்புகளை சின்சியாராகச் செய்வது அவசியம். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். வாகனப் பழுதில் அலட்சியம் கூடாது. முதுகு, கண்கள், அடிவயிறு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். பார்வதி வழிபாடு, பசுமை சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யுபிஎஸ்சி பணியிட அறிவிப்பில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு : திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு!