-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும் காலகட்டம். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் வரலாம். அது ஆதாயமாகவே இருக்கும்.
சோம்பலை உடனடியாக விரட்டுங்கள். புதிய முயற்சியாக எடுக்கும் காரியங்களில் ஜெயம் உண்டாகும்.
குடும்பத்தில் நிம்மதி நிலவும். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். வாரிசுகளால் பெருமை உண்டு. வாழ்க்கைத் துணையுடன் வீண் த்ர்க்கம் வேண்டாம்.
செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. அயல்நாட்டு வர்த்தகத்தினால் ஆதாயம் உண்டு.
அரசுத்துறையினர் வீண் களியாட்டம் தவிருங்கள். பணத்தைக் கையாள்வதில் கவனம் முக்கியம். அரசியல் சார்ந்தவர்கள் பொது இடங்களில் பேசும்போது நிதானம் தேவை. அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள்.
கலைஞர்கள், படைப்புத்துறையினர், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள். மாணவர்கள் அதிகாலைப் படிப்பைப் பழக்கமாக்குங்கள். வாகனத்தில் கவனச் சிதறல் கூடாது. அடிவயிறு, கழிவு உறுப்பு, சுளுக்கு உபாதைகள் வரலாம்.
ஷண்முகன் வழிபாடு சந்தோஷம் சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : TNWeSafe-ல் பணி!
கலைஞர் நாணயம் : சென்னை வரும் ராஜ்நாத் சிங்கின் முழு பயண விவரம்!