யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
அஸ்வினி
அல்லவை விலகி நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். திட்டமிடலும் நேரடி கவனமும் இருந்தால் நன்மைகள் தொடரும். மேலதிகாரிகள் ஆதரவு மகிழ்ச்சி தரும். உடனிருப்போர் ஒத்துழைப்பு கிட்டும். இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். அசையும் அசையா சொத்து சேரும். வாரிசுகளால் யோகம் உண்டு.
சுபகாரியத் தடைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். செய்யும் தொழிலில் ஏற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் அவசரம் வேண்டாம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு சீரான வளர்ச்சி உண்டு. கூடா நட்பினால் வீண் பழிகள் வரலாம், கவனம் தேவை. படைப்பாளிகளுக்கு அரசுவழிப் பாராட்டுகள் கிட்ட வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும். வாழ்க்கைப் பயணத்தில் வித்தை காட்டல் வேண்டாம். காது, மூக்கு, தொண்டை, சளித் தொல்லைகள் வரலாம். கணபதி வழிபாடு களிப்பு சேர்க்கும்.
பரணி
நன்மைகள் தொடர்ச்சியாக வரும் காலகட்டம். அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும். யாரிடமும் வீண் சச்சரவு வேண்டாம். மேலதிகாரிகளிடம் பணிவே நல்லது. திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். வீட்டில் சீரான போக்கு நிலவும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான தீர்வு கிட்டும். வாரிசுகளால் பெருமை சேரும்.
சுபகாரியங்களில் வீண் செலவைத் தவிருங்கள். செய்யும் தொழிலில் நிதானமான போக்கு நிலவும். புதிய முதலீடுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். அரசு, அரசியல் துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவு தொடரும். பொது இடங்களில் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள். கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வந்து சேரும்.
மாணவர்கள் சோம்பலை விரட்டினால் சாதனைகள் படைக்கலாம். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். நரம்பு, தலைவலி, அலர்ஜி உபாதைகள் வரலாம். வாகனத்தில் வேகம் கூடாது. மகாலட்சுமி வழிபாடு
மங்களங்கள் சேர்க்கும்.
கிருத்திகை
சிந்தித்து செயல்பட்டால் சீரான நன்மைகள் வரும் காலகட்டம். பணியிடத்தில் வீண் பரபரப்பும் படபடப்பும் தவிருங்கள். பொறுப்புகளில் அலட்சியம் கூடாது. வீண் களியாட்டப் பேச்சுகளால் கவனச் சிதறல் ஏற்படலாம், கவனமாக இருங்கள்.
மேலதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடனிருப்போர் குறைகளை ஒருபோதும் பேசவேண்டாம். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும்.
வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். பொது இடங்களில் குடும்ப விஷயம் பேசவேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் வீண் சச்சரவு தவிருங்கள். மூன்றாம் நபருக்காக உறவுகளைப் பகைத்துக்
கொள்ள வேண்டாம். வரவை சேமிக்கப் பழகுங்கள். செய்யும் தொழிலில் உழைப்பு ஏற்ப வளர்ச்சி ஏற்படும்.
பங்குவர்த்தகத்தில் அவசரம் கூடாது. அரசு, அரசியல் சார்ந்தவர்கள் மேலிடத்துக்கு
எதிரானவர்கள் நட்பை கனவிலும் நினைக்க வேண்டாம். பிறருக்கு ஜவாப், ஜாமீன் தருவதைத் தவிருங்கள். கலை, படைப்புத் துறையினருக்கு திட்டமிடல் முக்கியம். மாணவர்கள் கவனச் சிதறலைத் தவிருங்கள்.
இரவுப் பயணத்தில் உடைமைகள் பத்திரம். தலைவலி, தூக்கமின்மை, மன அழுத்தம் வரலாம். தியானம், யோகா நற்பலன் தரும். சிவன் வழிபாடு சீரான நன்மை தரும்.
ரோகிணி:
பொறுமையால் பெருமை பெறவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் அலட்சியம் கூடாது. நிதானமும் திட்டமிடலும் ரொம்பவே அவசியம். பொறுப்புகள் வரும்போது புலம்பலும் சலிப்பும் கூடாது. பணிகள் எதிலும் நேரடி கவனம் இருந்தால், சீக்கிரமே ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் கூடும். வார்த்தைகளை யோசித்துப் பேசினால் வாழ்க்கை இனிக்கும்.
குலதெய்வத்தைக் கும்பிட்டால், சுபகாரிய தடைகள் நீங்கும். ஆடம்பரக் கடனைத் தவிருங்கள். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். செய்யும் தொழிலில் முழுமையான முயற்சி அவசியம். அயல்நாட்டு செய்திகள் மகிழ்ச்சி தரும்.
அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். மாணவர்கள் மறதியைப் போக்க, கவனமாகப் படியுங்கள். கலை, படைப்புத் துறையினர், பணி ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.பயணப் பாதையில் நிதானம் முக்கியம். மறைமுக உறுப்பு, முதுகு, கண் உபாதைகளை உடனே கவனியுங்கள். அனுமன் வழிபாடு நன்மை தரும்.
மிருக சீரிஷம்
நாவடக்கம் இருந்தால், நன்மைகள் அதிகரிக்கக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதை சுமையாகக் கருதாமல். திட்டமிட்டு செயல்பட்டால் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். சோம்பலை விரட்டுவதும் திறமையை வளர்த்துக் கொள்வது முக்கியம். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். வாரிசுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
ஆடை, ஆபரணம் சேரும். வீடு, மனை வாங்குவதில் அவசரம் கூடாது. சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். புதிய மனிதர்களிடம் கவனமாகப் பழகுங்கள். செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப லாபம் வரும். அயல்நாட்டு வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு அவசரம், அலட்சியம் கூடாது. கையெழுத்திடும் சமயங்களில் கூடுதல் கவனமாக இருங்கள். படைப்பாளிகள் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் மனதை ஒருநிலைப் படுத்துவது முக்கியம். வாகனப் பழுதை உடனுக்குடன் சரிசெய்யுங்கள். முதுகு, அடிவயிறு, ஜீரண உறுப்பு உபாதைகள் வரலாம். மகான்கள் வழிபாடு மகிழ்ச்சி சேர்க்கும்.
திருவாதிரை:
எண்ணம் சீராக இருந்தால், ஏற்றம் ஏற்படும் காலகட்டம். பணியிடத்தில் படபடப்பும் அவசரமும் வேண்டாம். நிதானமே நிலையான நன்மை தரும். மேலிடத்தின் ஆதரவு கிட்டும். உடனிருப்போர் தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம். தாமதமானாலும் பொறுமையாக இருந்தால் நிச்சயம் உயர்வுகள் வரும். வீட்டில் நிம்மதியான சூழல் நிலவும். ரத்த பந்த உறவுகளால் பெருமை சேரும்.
வாரிசுகள் விஷயத்தில் அலட்சியம் கூடாது. வரவை சேமிப்பது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும். சுபகாரியங்களில் பெரியோர் வழிகாட்டலைக் கேளுங்கள். செய்யும் வர்த்தகம் எதுவானாலும் அதில் நேரடி கவனம் முக்கியம். ஒப்பந்தங்கள் எதையும் நிதானமாகப் படித்துக் கையெழுத்திடுங்கள்.
அரசுத்துறையில், அரசியல் சார்ந்தவர்கள், நிதானத்தைக் கடைபிடியுங்கள். சட்டதிட்டங்களை கனவிலும் மீறவேண்டாம். கலைத்துறை, படைப்புத்துறையினர் வாய்ப்புகளை வாய்ச்சவடாலால் விரட்டிவிட வேண்டாம். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. இரவுப் பயணத்தில் உடைமைகள் பத்திரம். கழுத்து, முதுகு, மூட்டு உபாதை வரலாம். பார்வதி வழிபாடு பரிபூரண நன்மை தரும்.
புனர்பூசம்
கஷ்டங்கள் நீங்கத் தொடங்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். மறைமுக எதிரிகள் பலம் அதிகரிக்கலாம். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். உறவுகளால் வசந்தம் வரும். சுபகாரியங்கள் கைகூடி வரும். வரவை சேமிக்கப் பழகுங்கள். பெரியோர் உடல்நலனில் அக்கறை அவசியம்.
செய்யும் தொழிலில் சுணக்கம் நீங்கும். பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட், சூதாட்ட முதலீடு எதுவும் வேண்டாம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். கலை,படைப்புத் துறையினர் திறமைக்கு உரிய ஏற்றத்தைப் பெறுவீர்கள். அயல்நாட்டுப் பயணத்தில் சட்டத்தை மதித்தல் அவசியம். மாணவர்கள், அதிகாலைப்படிப்பை வழக்கமாக்குவது நல்லது. பயணப் பாதையில் சுகாதாரமில்லா உணவே நஞ்சாகலாம் கவனமாக இருங்கள். சுளுக்கு, பல், மூட்டு உபாதைகள் வரலாம். பெருமாள், தாயார் வழிபாடு பெருமை சேர்க்கும்.
பூசம்
அமைதியாக இருந்தால் அனுகூலங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் நேரடி கவனமும் திட்டமிடலும் மிக மிக முக்கியம். உடனிருப்போர் குறையை பெரிதுபடுத்த வேண்டாம். பணத்தைக் கையாள்வதில் நிதானம் முக்கியம். குடும்பத்து உறவுகளிடம் குதர்க்கப் பேச்சு கூடாது. தம்பதியர் இடையே மூன்றாம் நபர் மத்தியஸ்தத்திற்கு இடம்தர வேண்டாம். வாழ்க்கைத் துணை வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். கொடுக்கல் வாங்கலை நேரடி கவனத்தோடு செய்யுங்கள்.
சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பொருள் சேரும். செய்யும் தொழிலில் நேரடி கவனமும் நேர்மையும் தேவை. புதிய முதலீடுகளில் அவசரம் தவிருங்கள். அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். கலை, படைப்புத் துறையினர், கவனத்தை சிதறவிடாமல் இருப்பது முக்கியம்.
மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டலைக் கேளுங்கள். தினமும் சிறிது நேரமாவது குலதெய்வத்தை கும்பிடுங்கள். இரவு நேரப் பயணத்தில் இருட்டில் இறங்க வேண்டாம்.. மனஅழுத்தம், ரத்த அழுத்த மாற்றம், நரம்பு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு நம்பிக்கை சேர்க்கும்.
ஆயில்யம்:
அலட்சியமும் அவசரமும் கூடாத காலகட்டம். பணியிடத்தில் பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். கோப்புகளை பத்திரமாகக் கையாளுங்கள். பணியிட ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம், வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் நடக்கும்.
எதிர்பார்த்த பொருள் வரவு நிச்சயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளைத் தவிருங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் நிதானம் முக்கியம். அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் தொடரும். அதேசமயம் உங்கள் வாக்கில் நிதானம் அவசியம் தேவைப்படும். அரசியலில் உள்ளவர்கள், மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். வாக்குறுதி எதையும் தரும் முன் நிதானமாக யோசியுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் அரசுவழி ஆதரவைப் பெறுவீர்கள். எதிர்பாலரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். மாணவர்களுக்கு மனம்போல நன்மை உண்டாகும். பயணத்தில் வேகம் கூடவே கூடாது. பற்கள், எலும்பு, தலைவலி உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடு, வாழ்வை பிரகாசமாக்கும்
அடுத்தடுத்த நட்சத்திரப் பலன்கள் தொடர்கிறது
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…