–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
பேச்சில் நிதானம் இருந்தால் பெருமைகள் நிலைக்கும் காலகட்டம். அலுவலத்தில் உங்கள் திறமை உணரப்படும். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். புதிய பொறுப்புகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ப உயர்வுகளும் கிட்டும். மேலதிகாரிகளிடம் பேசும்போது தற்பெருமையைத் தவிருங்கள்.
குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். வரவு அதிகரித்தாலும் செலவும் சேர்ந்து வரும். தரல், பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். அக்கம்பக்கத்தினருடன் வீண் உரசல் வேண்டாம்.
வாரிகளால் பெருமை சேரும். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் வளர்ச்சி சீராகும். நேரான செயல்களால் அது மேலும் வளரும். புதிய முதலீட்டில் அவசரம் வேண்டாம். அரசியலில் உள்லவர்கள் யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம்.
பொது இடங்களில் நிதானத்தைக் கடைபிடியுங்கள். அரசுப்பணி புரிபவர்களுக்கு ஆதரவும் ஆதாயமும் அதிகரிக்கும். பணியிடக் கோப்புகளை பத்திரமாக வையுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு பெயரும் புகழும் கிட்டும். வாய்ப்புகளை சின்சியாராகச் செய்வது அவசியம்.
மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். வாகனப் பழுதில் அலட்சியம் கூடாது. தலைவலி, ரத்தநாள உபாதை, தொற்றுப் பிரச்னைகள் வரலாம். வாகனப் பழுதை உடனுக்குடன் சீரமையுங்கள். ராகவேந்திரர் வழிபாடு ரம்யமாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அனுஷம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : விசாகம் (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : சுவாதி (18.10.2024 முதல் 15.11.2024 )
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)