–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
அலட்சியமும் அவசரமும் கூடாத காலகட்டம். பணியிடத்தில் பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். மேலதிகாரிகளிடம் வறட்டு ரோஷம் காட்ட வேண்டாம். கோப்புகளை பத்திரமாகக் கையாளுங்கள். பணியிட ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம்.
வெளியூர், வெளிநாட்டு வாய்ப்புகள் தடைபடலாம். அது நன்மைக்கே. வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் நடக்கும்.
எதிர்பார்த்த பொருள் வரவு நிச்சயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளைத் தவிருங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும்.
பங்குவர்த்தகத்தில் நிதானம் முக்கியம். அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான நன்மைகள் நேரான செயல்களால் தொடரும். வாக்கில் நிதானம் மிகமிக அவசியம்.
அரசியலில் உள்ளவர்கள், மேலிடத்திற்கு எதிரானவர்களை கனவிலும் சந்திக்க வேண்டாம். வாக்குறுதி எதையும் தரும் முன் நிதானமாக யோசியுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் அரசுவழி ஆதரவைப் பெறுவீர்கள்.
எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். மாணவர்களுக்கு மனம்போல நன்மை உண்டாகும். பயணத்தில் வேகம் கூடவே கூடாது. பற்கள், எலும்பு, தலைவலி உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு இனிமை சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ஆயில்யம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)