–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
சினம் தவிர்த்தால், சீரான நன்மைகள் கிட்டக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் சிடுசிடுப்பும் கடுகடுப்பும் தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளிடம் பேசும்போது துணிவை விட பணிவே முக்கியம். அனுபவம் மிக்க யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். உங்கள் பொறுப்பை பிறரிடம் ஒப்படைப்பதும் கூடாது.
குடும்பத்தில் குதர்க்கம் தவிர்த்தால் குதூகலம் இடம்பிடிக்கும். குழந்தைகள் வாழ்வில் சுப தடைகள் நீங்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலத்தில் கவனம் முக்கியம்.
வரவு சீராக இருக்கும். சொத்து வழக்கில் விட்டுக் கொடுத்தலே நல்லது. செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும். நேரான போக்கும், நேர்மையும் மிகமிக முக்கியம்.
அரசுத்துறையில் உள்ளவர்கள் திறமை மேலிடத்தால் உணரப்படும். அதனால் ஆதரவும் ஆதாயமும் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்கள் அவசரம் தவிர்த்து யோசித்து செயல்பட்டால், மேலிடத்திடம் பாராட்டு, பெருமை பெறுவீர்கள்.
கலைஞர்கள், படைப்பாளிகள் செல்லும் இடத்தின் சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில் அலட்சியம் கூடாது. மாணவர்கள் வீண் கேளிக்கைகளை தவிர்ப்பது நல்லது.
இரவுப் பயணத்தில் இடைவழியில் இறங்க வேண்டாம். ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை நோய் உபாதைகள், மறைமுக உறுப்பு பிரச்னை வரலாம். அனுமன் வழிபாடு ஆனந்தம் தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)