ஆவணி மாத நட்சத்திர பலன் -ஆயில்யம்!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

ஜோதிடம்

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

பொறுமையால் பெருமை பெறவேண்டிய காலகட்டம்.

அலுவலகத்தில் அலட்சியம் கூடாது. நிதானமும் திட்டமிடலும் ரொம்பவே அவசியம். பொறுப்புகள் வரும்போது புலம்பலும் சலிப்பும் கூடாது. பணிகள் எதிலும் நேரடி கவனம் இருந்தால், சீக்கிரமே ஏற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் குதூகலம் கூடும். வார்த்தைகளை யோசித்துப் பேசினால் வாழ்க்கை இனிக்கும். குலதெய்வத்தைக் கும்பிட்டால், சுபகாரிய தடைகள் நீங்கும்.

ஆடம்பரக் கடனைத் தவிருங்கள்.  வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள்.  உறவினர்கள் வருகை உற்சாகம் தரும்.

செய்யும் தொழிலில் முழுமையான முயற்சி அவசியம். அயல்நாட்டு செய்திகள் மகிழ்ச்சி தரும்.

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள்.

மாணவர்கள் மறதியைப் போக்க, கவனமாகப் படியுங்கள்.

கலை, படைப்புத் துறையினர், பணி ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.

பயணப் பாதையில் நிதானம் முக்கியம்.

மறைமுக உறுப்பு, முதுகு, கண் உபாதைகளை உடனே கவனியுங்கள்.

இஷ்ட மகான் வழிபாடு இனிமை சேர்க்கும்.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

 

ஆவணி மாத நட்சத்திர பலன் -பூசம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

தங்கம், ரேடோ வாட்ச் எடுத்துக்க, மெடல்ல மட்டும் திருப்பி தந்துடுப்பா- திருடனிடம் வயநாடு நேவி வீரர் குடும்பம் உருக்கம்

தாம்பரத்தில் அலைமோதும் கூட்டம்… ரயில் பயணிகள் அவதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *