–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
பொறுமையே பெருமை தரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம்.
யாரிடம் பேசும்போதும் துணிவை விட பணிவே நல்லது. புறம்பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். பணிகளில் நேரம் தவறாமை முக்கியம்.
எதிர்பார்த்த உயர்வுகள் தாமதமாகலாம், புலம்பாமல் பொறுமை காப்பது நல்லது. இல்லத்தில் ஒற்றுமை உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்.
மூன்றாம் நபர் தலையீட்டை அறவே தவிருங்கள். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்கள் பேசவேண்டாம். தரல் பெறலில் அலட்சியம் கூடாது. சுபகாரியத்தில் நிதானம் முக்கியம்.
செய்யும் தொழிலில் சீரான லாபம் கிட்டும். அது தொடர, நேரான செயல்கள் முக்கியம். அரசுத்துறையினர் ஆதரவு அதிகரிக்கப் பெறுவீர்கள். சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வும் வரும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு மேலிடத்தின் ஆதரவு உண்டு. சட்டப்புறம்பு சகவாசத்தை சட்டென உதறுங்கள்.
கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும். மாணவர்களுக்கு திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வந்து சேரும். வாகனப் பயணத்தில் நிதானம் முக்கியம். அடிவயிறு, முதுகு, பற்களில் உபாதை வரலாம். கருடன் வழிபாடு களிப்பு சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆவணி மாத நட்சத்திர பலன் -மகம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன் -ஆயில்யம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன் – விசாகம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)