நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம். அதேசமயம் சோம்பல் தவிர்ப்பது முக்கியம்.
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வந்து சேரும்.
உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.
இடமாற்றம், பதவி எண்ணம்போல் வரும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரலாம்.
வீட்டில் நிம்மதி நிலவத் தொடங்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும்.
வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும்.
வீடு, வாகனம் வாங்க புதுப்பிக்க யோகம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள்.
செய்யும் தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.
அரசியல் சார்ந்தவர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். முகஸ்துதி நபர்களைத் தவிருங்கள்.
அரசுத்துறையினர்க்கு வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.
படைப்புத் துறையினர் வாக்குறுதிகளில் கவனமாக இருங்கள்.
எதிர்பார்க்கும் நற்செய்திகள் நிச்சயம் வரும்.
மாணவர்களுக்கு சகவாசத்தால் பிரச்னை வரலாம், கவனமாக இருங்கள்.
வாகனத்தில் வேகக்கட்டுப்பாடு முக்கியம்.
நரம்பு, ஒற்றைத் தலைவலி, கழுத்து உபாதைகளை உடனே கவனியுங்கள்.
திருமலையான் வழிபாடு தித்திக்கச் செய்யும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆவணி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன் – விசாகம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன் – சுவாதி! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன் – சித்திரை! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)