2024 ஆடி மாத (17.7.24- 16.8.2024) நட்சத்திரப் பலன்கள்! மூலம் முதல் ரேவதி வரை!

ஜோதிடம்

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

 

19 .மூலம்

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் மாதம். முடங்காத முயற்சிகள் இருந்தால், அலுவலகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் தேடிவரும். பணிசார்ந்த பயணங்கள் அதிகரித்தாலும் அவை ஆதாயம் தரும். முடங்கி இருந்த நிலை மாறி முன்னேற்றம் உருவாகும். வார்த்தைகளில் நிதானமாக இருப்பது அவசியம். பிறர் தவறைப் பெரிதுபடுத்திப் பேசவேண்டாம்.

இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். பிரிந்திருந்த உறவுகள் தேடிவரும். புதிய உறவும் அதனால் வரவும் உண்டு. பெற்றோர் பெரியோர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். பணவரவை சேமிப்பது நல்லது.

பெண்களுக்கு சாதகமான சூழல் நிலவும். குடும்பத்தில் முன்னிலை வகிக்கும் சந்தர்ப்பம் அமையும்.

தொழிலில் தளராத உழைப்பு தேவை. யாருக்காகவும் தெரியாத தொழிலில் முதலீடு செய்யவேண்டாம்.

அரசியலில் இருப்போர்  அடக்கத்துடன் இருப்பது நல்லது. பேசும் வார்த்தைகளை யோசித்துப் பேசுங்கள். அரசுப்பணி புரிபவர்கள், வீண் கர்வம் தவிர்ப்பது அவசியம். மூன்றாம் நபரால், வீண் பழி வரலாம், கவனமாக இருங்கள்.

கலைத்துறை, மருத்துவம், கல்வித் துறையில் உள்ளோர்க்கு கணிசமான நன்மைகள் கிட்டும். சிலர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.

மாணவர்கள் தினசரிப்படிப்பை வழக்கமாக்குவது நல்லது.

காது, மூக்கு, தொண்டை, அல்சர், அஜீரண உபாதைகள் வரலாம்.

அங்காளி வழிபாடு ஆனந்தம் தரும்.

 

20 .பூராடம்

நிதானத்துடன் செயல்பட்டால் நிச்சயமாக ஏற்றம் ஏற்படும் மாதம். பணியிடத்தில் பொறுமையும் பொறுப்பு உணர்வும் முக்கியம். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம்.கோப்புகளில் கையெழுத்திடும்போது நிதானம் முக்கியம். இப்போதைய பொறுமை எதிர்காலப் பெருமையாகும்.

இல்லத்தில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத்துணை வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுங்கள். வாரிசுகளிடம் அதீத கண்டிப்பு வேண்டாம்.உடல்நலத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். தினமும் சிலநிமிடங்களாவது குலதெய்வத்தைக் கும்பிடுவது நன்மை தரும். ஆபரணங்களை பத்திரமாக வையுங்கள்.

பெண்கள் ஹார்மோன் உபாதை தெரிந்தால் உடனே கவனியுங்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருங்கள்.

செய்யும் தொழிலில் சோம்பல் தவிருங்கள். பிறரை நம்பி பெரும் முதலீடுகள் செய்ய வேண்டாம். கடன் தருவது ,பெறுவது உடனுக்குடன் எழுதி வையுங்கள்.

அரசியலில் இருப்போர் வீண் வாக்குறுதிகளைத் தவிருங்கள். பழைய கசப்பை யாரிடமும் காட்டவேண்டாம். அரசாங்கப் பணியில் இருப்பவர்கள் பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். பிறருடைய பிரச்னைகளில் நீங்கள் தலையிட வேண்டாம்.

கலைத்துறை, சினிமா, அறிவியல் துறையினருக்கு ஏற்றங்கள் ஏற்படும். எந்த சமயத்திலும் குறுக்கு வழி முயற்சிகள் வேண்டாம்.

மாணவர்கள் படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம். பயணத்தில் உடைமைகள் பத்திரம்.

ஒற்றைத் தலைவலி, சுளுக்கு, காயம், பூச்சிக்கடி தொல்லைகள் ஏற்படலாம்.

விநாயகர் வழிபாடு விசேஷ நன்மை தரும்.

 

  1. உத்திராடம்

வாக்கில் இனிமை இருந்தால் வாழ்க்கையில் உயர்வுகள் வரும் மாதம். அலுவலகத்தில் உங்கள் உழைப்பிற்கு மரியாதை கிட்டும். தேவையற்ற வார்த்தைகள்  யாரிடமும் பேசவேண்டாம். எதிர்பார்த்த ஏற்றங்கள் தாமதமானாலும் நிச்சயம் வரும்.உடன்பணிபுரிவோரின் ஆலோசனைகளைக் கேளுங்கள் அதேசமயம் யோசித்து செயல்படுங்கள்.

இல்லத்தில் இன்சொல் முக்கியம். தம்பதியரிடையே மனம்விட்டுப் பேசுங்கள். வாரிசுகளால் பெருமை உண்டாகும். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். ஆடை, ஆபரணம் சேரும். விசேஷங்களில் அதீத ஆடம்பரம் வேண்டாம். செய்யும் தொழில் எதுவானாலும் அதில் முழு கவனம் முக்கியம், ஏற்றுமதி இறக்குமதியில் மாற்றங்கள் வர வாய்ப்பு உண்டு.

அரசுத்துறையில் பணிபுரிவோர் நிதானத்தைக் கைக்கொள்ளுங்கள். வேண்டாத பிரச்னையில் தலையிட வேண்டாம். அரசியலில் உள்ளவர்கள் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். மேலிடத்துடன் சண்டை சச்சரவு வேண்டாம்.

சினிமா, கலைத் துறையினர் கடுமையான வார்த்தைகளைத் தவிர்ப்பது அவசியம். மாணவர்கள் சோம்பலை விரட்டுங்கள். பயணங்களில் நிதானம் முக்கியம்.

அடிவயிறு, கழிவு உறுப்பு உபாதை, பற்கள், கண் பிரச்னைகள் வரலாம்.

குலதெய்வ வழிபாடு, குலம் காக்கும்.

 

  1. திருவோணம்

எண்ணம் போல் ஏற்றம் வரும் மாதம்.

அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். சம்பள உயர்வு, பதவி, பொறுப்புகள் கிட்டும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பும் அதனால் ஏற்றமும் உண்டாகும். எந்த சமயத்திலும் அவசரம் அலட்சியம் கூடாது. உடனிருப்போர் விஷயங்களில் ஒதுங்கியே இருங்கள்.

வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் வேண்டாம் .வீடு, வாகனம் வாங்க, புதுப்பிக்க யோகம் உண்டு. வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் நடக்கும். புதிய அறிமுகங்களிடம் நெருக்கம் வேண்டாம். பெண்கள் சொல்லில்கவனம் இருந்தால் வாழ்வில்பெருமை பெறலாம்

செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் நேர்மை முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் சீரான லாபம் கிட்டும்.

அரசியலில் இருப்போர்  ஆதரவை தக்க வைத்துக்கொள்ள, அடக்கத்துடன் இருப்பது நல்லது. மேலிடத்தின் அனுமதி இல்லாத எதையும் கனவிலும் செய்ய வேண்டாம். அரசுப்பணி செய்வோர் திறமைக்கு ஏற்ப உயர்வு பெறுவீர்கள். சிலருக்கு பணிசார்ந்த பயணங்கள் அதிகரிக்கலாம். ஆனால் அது ஆதாயமே தரும். கலை,

சினிமா, மருத்துவம், கல்வித்துறையினர் ஏற்றத்தை நிச்சயம் காண்பீர்கள். அரசு வழிப் பாராட்டு சிலருக்குக் கிட்டும். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். பயணத்தில் பிறர் தரும் உணவுப்பொருளை உட்கொள்ள வேண்டாம்.

தோல் நிறமாற்றம், அலர்சி, சுவாசப் பிரச்னை, முதுகு உபாதைகள் வரலாம்.

குருவாயூரப்பன் வழிபாடு குன்றா நன்மை தரும்.

 

23 அவிட்டம்.

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் மாதம்.

பணியிடத்தில் உடன் பணிபுரிவோர் ஆதரவு கிட்டும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.சிலருக்குப் புதிய வேலை வாய்ப்பு கைகூடிவரும். எந்த சமயத்திலும் வீண் தர்க்கமும் வேண்டாத கர்வமும் தவிருங்கள்.

இல்லத்தில் சுமுகமான சூழல் நிலவும்.தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாரிசுகளால் பெருமை பெறுவீர்கள். குடும்ப விஷயங்களை பொது இடத்தில் பேசவேண்டாம்.வரவில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். உறவுகளிடையே செல்வாக்கு கூடும்.

வர்த்தகத்தில் வளர்ச்சிக்கு முயற்சிகள் முக்கியம். ஏற்றுமதி இறக்குமதியில்  தரக்கட்டுப்பாட்டில் கவனம் முக்கியம்.

அரசியலில் இருப்பவர்கள், ஆதரவை தக்க வைத்துக்கொள்ளலாம். சிலருக்கு புதிய பதவியும் அதனால் பெருமையும் சேரும். அரசுப்பணியில் உள்ளவர்கள்,சீரான வளர்ச்சியைப் பெறலாம்.கோப்புகளில் கையெழுத்து இடுவதில் நிதானம் தேவை.

கலைத்துறை, சினிமா, இசைக்கலைஞர்கள் திறமைக்கு உரிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள் படைப்பு ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்.

மாணவர்கள் விடியற்காலையில் எழுந்து படிப்பது நல்லது.

வாகனத்தில் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.

கண்கள், ஒற்றைத்தலைவலி, அல்சர், தூக்கமின்மை, அலர்ஜி உபாதைகள் வரலாம்.

ஈஸ்வரன் வழிபாடு இணையில்லா நன்மை தரும்.

 

24 .சதயம்

அவசரம் கூடவே கூடாத மாதம்.

திட்டமிட்டுச் செயல்பட்டால் அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். எந்த சமயத்திலும் பொறுப்பு உணர்வு முக்கியம். சுணங்காமல் இருந்தால், இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடிவரும்.புதிய பணிகளில் அவசரம் வேண்டாம். பணிசார்ந்த பயணங்களில் கோப்புகள், பத்திரம்.

இல்லத்தில் குதூகலம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும். வீடு, வாகனம் புதுப்பிக்க வாய்ப்புகள் வரும். கடன்கள் சுலபமாக அடைபடும். பெற்றோர் பெரியோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். அக்கம் பக்கத்தில் அதிக நெருக்கம் வேண்டாம். பெண்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக இருங்கள். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள்.

தொழிலமைப்பில் வேண்டாத முதலீடுகள் தவிருங்கள்.வர்த்தகக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துங்கள்.

அரசியல் சார்ந்து உள்ளவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளைத் தவிருங்கள். மேலிடத்தின் கட்டளைகளை கனவிலும் மீறவேண்டாம். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். சக ஊழியர்களின் ஆதரவு பெருமை சேர்க்கும்.

சினிமா, கலைத்துறை,இசைத்துறை,கல்விப்பணிகளில் உள்ளவர்களுக்கு முயற்சிகளுக்குப் பலன்கிடைக்கத் தொடங்கும். எதிர்பாலரிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.

மாணவர்களுக்கு உயர்வுகள் உருவாகத்தொடங்கும்.

இரவுப் பயணத்தில் நிதானம் முக்கியம். முதுகு, அடிவயிறு, தோள்பட்டை, ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை உபாதைகள் வரலாம்.

சனீஸ்வரன் வழிபாடு சகல நன்மை தரும்.

 

  1. பூரட்டாதி.

பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால் நல்லவை நடக்கும் மாதம்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக வரும். அதற்கு திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். மேலதிகாரிகளிடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. வாழ்க்கையில் வசந்தகாலம் ஆரம்பமாகும்.

உறவுகளிடம் கடந்த கால மன வருத்தங்களைப் பேசி நிகழ்கால நிம்மதியை கெடுத்துக்கொள்ள வேண்டாம். தம்பதியரிடையே விட்டுக்கொடுத்தல் முக்கியம். தம்பதியர் பரஸ்பரம் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள். ஆபரணம், பணம் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பெண்களுக்கு யோகமான காலகட்டம்.  வாக்குறுதி யாருக்கும் கொடுக்க வேண்டாம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு வளர்ச்சியில் இருந்த தடைகள் நீங்கும்.மேலிடத்தின் ஆதரவு நிலைக்கும். அனுபவம் உள்ளவர்களைப் பகைக்க வேண்டாம். அரசுப்பணியில் இருப்பவர்கள்,இடமாற்றம் வந்தால் தவிர்ககாமல் ஏற்பதே நல்லது.

கலைஞர்கள், சினிமா, மருத்துவத் துறையினருக்கு வளர்ச்சிவிகிதம் அதிகரிக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் யோகம் உண்டு.

மாணவர்கள் தினசரிப் படிப்பை வழக்கமாக்குவது நல்லது.

வாகனத்தில் சிறுபழுது இருந்தாலும் உடன் சீர் செய்யுங்கள்.

காது, மூக்கு, தொண்டை, சுவாச உபாதைகள் வரலாம்.

சிவன் பார்வதி வழிபாடு சிறப்பு சேர்க்கும்.

 

  1. உத்திரட்டாதி

நாவடக்கம் இருந்தால் நன்மைகள் சீராக வரத்தொடங்கும் மாதம்.

தானுண்டு தன் வேலை உண்டு என்றிருந்தால், அலுவலகத்தில் ஏற்றங்கள் வரும். எந்த சமயத்திலும் கவனச் சிதறல் கூடாது.பிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பழி ஏற்க நேரிடலாம், கவனம் முக்கியம். பொறுப்புகளை திட்டமிட்டும் சுணங்காமலும் செய்யுங்கள்

.குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிருங்கள். உறவுகளிடம் வீண் ஜம்பம் வேண்டாம். வரவை சேமிக்கப் பழகுங்கள்.சுபகாரியங்களில்  அதீத ஆடம்பரம் தவிருங்கள். பூர்விக சொத்து சேரும்.குடும்பத்துப் பெரியவர்கள் ஆலோசனையை அவசியம் கேளுங்கள். பெண்கள் ஹார்மோன் உபாதைகள் தெரிந்தால் உடனே கவனியுங்கள். தரல் பெறலை நேரடியாகச் செய்யுங்கள்.

செய்யும் தொழிலில்  வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். யாருடைய கட்டாயத்துக்காகவும் புதிய முதலீடு செய்ய வேண்டாம். காசோலைகளை கவனமாகக் கையாளுங்கள்.

அரசியலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். மேலிடத்தின் நம்பிக்கைக்குப்பாத்திரராவீர்கள். அரசுப்பணி செய்வோர், தங்கள் பொறுப்பை தாங்களே செய்வது நல்லது. சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கலாம்.

கலைஞர்கள், படைப்பாளிகள், சினிமாத்துறையினருக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. இப்போதைய முயற்சியே நாளை வெற்றிக்கனியாகும்.

மாணவர்கள் சோம்பலை விரட்டுவது அவசியம்.

வாகனத்தில் வேகம் கூடாது.

ரத்த நாளம், பரம்பரை உபாதை, தலைவலி, நெஞ்செரிச்சல், கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம்.

பைரவர் வழிபாடு பசுமையாக்கும்.

 

27 .ரேவதி

தன்னடக்கம் இருந்தால், தலை நிமிரும் மாதம்.

பணியிடத்தில் வீண் ரோஷம் வேண்டாத கோபம் தவிர்ப்பது நல்லது. தளராமல் உழைத்தால் மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். உடன் இருக்கும் யாரையும் மட்டம் தட்டிப் பேசவேண்டாம். பணத்தைக் கையாள்வோருக்கு நிதானம் முக்கியம். இடமாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம்.

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவுகள் பிரிந்திருந்த நிலை மாறும். அக்கம் பக்கத்தினருடன் அதீத நெருக்கம் வேண்டாம். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பெரும் பொருள் சேரும். பெண்கள் கருத் தாங்கும் காலத்தில் கவனமாக இருங்கள். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள்.

செய்யும் தொழிலில் சலிக்காத உழைப்பு முக்கியம். பங்குவர்த்தகம், கேளிக்கை, சூதாட்டத்தில் முதலீடு வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கவனம் முக்கியம்.

அரசியலில்  உள்ளோர் அடக்கமாக இருந்தால், ஆதரவு நிலைக்கும். வீண் வாக்குறுதிகள்  தர வேண்டாம். அரசுப்பணி புரிவோர், தாமதமான உயர்வுகளை நிச்சயம் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் தவிருங்கள்.

கலைஞர்கள், சினிமாத் துறையினர், இசைத்துறையினருக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும். எந்த சமயத்திலும் வீண் ஜம்பம் வேண்டாம்.

மாணவர்கள், முயற்சிக்கு ஏற்ப மதிப்பெண்கள் உயரும்.

இஷ்டப்பட்ட கல்விப் பிரிவு கைகூடும். இரவில் தனியே பயணிக்க வேண்டாம். தூக்கமின்மை, எலும்பு தேய்மானம், ரத்த அழுத்த மாற்றம், தொற்றுக் காய்ச்சல் உபாதைகள் வரலாம்.

நரசிம்மர் வழிபாடு நல்லன தரும்.

 

2024 ஆடி மாத (17.7.24- 16.8.2024) நட்சத்திரப் பலன்கள்! மகம் முதல் கேட்டை வரை!

2024 ஆடி மாத (17.7.24- 16.8.24)நட்சத்திரப் பலன்கள்! அஸ்வினி முதல் ஆயில்யம் வரை!

மாரி செல்வராஜின் “வாழை”… “தென்கிழக்கு தேன்சிட்டு” முதல் சிங்கிள் எப்படி?

கடலூர் மூவர் கொலை: “அம்மா தற்கொலைக்கு பழிவாங்கினேன்” – குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *