-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மின்னம்பல நேயர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
கன்னி
சாதகங்கள் அதிகரிக்கக் கூடிய வருடம். தேவையற்ற தர்க்கமும் வேண்டாத வாதமும் தவிர்த்தல், நிம்மதி தொடரும். அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பதவி, பொறுப்புகள் மனம்போல் கைகூடும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடிவரும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். அனுபவம் மிக்கவர்களால் ஆதாயம் கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்து சேரும். பழைய கடன்கள் பைசல் ஆகும். பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு சாதகமான சூழல் நிலவும். அக்கம் பக்கத்தினரிடம் வீண் உரசல் தவிருங்கள். ஹார்மோன் குறைபாடுகளில் அலட்சியம் வேண்டாம். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சி ஆகும். புதிய முயற்சிகள் ஏற்றத்தைத் தரும். அர்சுவழிப் பாராட்டுகள் சிலருக்குக் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். அரசுப்பணியில் உள்ளவர்கள் நன்மைகள் அதிகரிக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் இரவில் வெகு நேரம் விழித்திருப்பதைத் தவிருங்கள். கலைஞர்கள், சினிமாத்துறையினர் கணிசமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். செல்லும் இடத்தின் சட்டங்களை மதியுங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். தலை, முதுகு, கழிவு உறுப்பு, ரத்தத் தொற்று உபாதைகள் வரலாம். நரசிம்மர், பைரவர் வழிபாடு நன்மைகள் பல சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….