2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : ரிஷபம்!

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மின்னம்பல நேயர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!


அல்லவை குறைந்து நல்லவை அதிகரிக்கக் கூடிய ஆண்டு. எதிலும் முழு முயற்சியும் நேரம் தவறாமையும் இருந்தால், நன்மைகள் தொடர்ந்து வரும். அலுவலகத்தில் நீங்கள் திறமையால் முன்னேற்றங்களைக் காணலாம். உயரதிகாரிகளிடம் பேசும்போது தர்க்கத்தைவிட  தன்னடக்கமே நல்லது. பிறர் குறையை பெரிதுபடுத்துவதைத் தவிருங்கள். எதிர்பார்த்த பதவி, இடமாற்றம் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் சுமுகமான போக்கு நிலவும். இந்த சமயத்தில் வேண்டாத ரோஷம் பெரும் சங்கடத்தை உருவாக்கிவிடலாம். வரவை சேமிக்கப் பழகுங்கள்.சுபகாரியங்களில் பெற்றோர், பெரியோர் ஆலோசனைகலைக் கேளுங்கள். பிறமொழி நபர்களிடம் கவனமா பழகுங்கள். தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். அயல்நாட்டு ஒப்பந்தத்தில் அவசரம் வேண்டாம். நடைமுறை சட்டங்களில் கவனமாக இருங்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும். கர்ப்பிணிகள் கவனமாக இருங்கள். அரசியலில் இருப்போர் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. அரசாங்க ஊழியர்கள் வளர்ச்சி அதிகரிக்கும். கையெழுத்திடுகையில் கவனமாக இருங்கள்.படிப்பில் கவனச் சிதறலைத் தவிருங்கள். சினிமா, கலைத்துறையினர் ரகசியங்களைப் பொது இடத்தில் பகிர வேண்டாம்.கழுத்து,மூட்டு, ரத்த அழுத்த மாற்றம், அலர்ஜி உபாதைகள் வரலாம். வாகனப்பழுதை உடன் சீர் செய்யுங்கள். துர்க்கை, தட்சிணாமூர்த்தி வழிபாடு வாழ்வை செழிக்க வைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share