2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : மிதுனம்!

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மின்னம்பலம் நேயர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

மிதுனம்

முயற்சிகள் பலிதமாகும் ஆண்டு. எந்த சமயத்திலும் அலட்சியமும் அவசரமும் மட்டும் கூடவே கூடாது. அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்றிடுங்கள். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடாது. வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணையால் சீரான நன்மைகள் கிட்டும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். கடன் தருவது, பெறுவதை உடனுக்குடன் எழுதி வையுங்கள். பெண்கள் சமையலறையில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியிடத்தில் பேசவேண்டாம். தொழிலமைப்பில் லாபம் சீராகும்.பணிபுரியும் யாரிடமும் வீண் தகராறு வேண்டாம். ரசாயனத் தொழிலில் நிதானம் முக்கியம். அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பதே நல்லது. சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கப் பணியில் உள்ளோர் சீரான நன்மைகளைப் பெறுவீர்கள்.மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். கலைஞர்கள், சினிமாத்துறையினர் வாய்ப்புகளை வரிசையாகப் பெறுவீர்கள். பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகள் வரலாம். மதுரை மீனாட்சி, முக்குறுணி விநாயகர் வழிபாடு விசேஷ நன்மை தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share