2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : தனுசு!

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மின்னம்பல நேயர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

தனுசு

பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால், உயர்வுகள் வரக்கூடிய ஆண்டு. திட்டமிடலும் நேரம் தவறாமையும் உயர்வுகளைத் தொடர்ச்சியாக்கும். அலுவலகத்தில் முயற்சிகளில் முடங்காமல் இருந்தால், அனுகூல சூழல் நிலவும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வு, இடமாற்றம் நிச்சயம் கைகூடும். அதேசமயம் எதிலும் நிதானமும் நேரடி கவனமும் முக்கியம். புதிய பணி கைக்கு எட்டாமல், இருக்கும் பணியை உதற வேண்டாம். மேலதிகாரிகளிடம் பேசும்போது அசட்டுத் துணிச்சலை விட அடக்கமே நல்லது.

வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாழ்க்கைத்துணை வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அசையும் அசையா சொத்து சேரும். கையிருப்பை ஆடம்பரத்தில் கரைக்க வேண்டாம். பெண்களுக்கு செல்வாக்கு உயரும். குழந்தை பாக்யம் வேண்டுவோர் குலதெய்வத்தை வணங்குவது நல்லது.

தொழிலில் தொடர்ச்சியாக லாபம் வரும். சட்டப்புறம்பினை கனவிலும் நினைக்க வேண்டாம். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துங்கள். அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். செயல்களில் நிதானம் இருக்கட்டும். அரசுத்துறை சார்ந்த பணியில் உள்ளோர்க்கு ஆதாயங்கள் அதிகரிக்கும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கலாம்.

மாணவர்கள், யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையசைக்க வேண்டாம். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு திறமை வெளிப்படும் அளவுக்கு வாய்ப்புகள் வரும். வாகனத்தில் வித்தைகாட்டல் வேண்டாம். அடிவயிறு, கீழ் முதுகுத் தண்டுவடம், மன அழுத்த உபாதைகள் வரலாம். ராமர், சீதை, அனுமனை ஆராதிப்பது வாழ்வை இனிமையாக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள்: விருச்சிகம்!

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள்: துலாம்!

”சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி கொடுப்பேன்” : நீதிமன்றத்தில் ஆஜரான வருண்குமார் ஐபிஎஸ் உறுதி!

பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை : குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share