2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : மீனம்!

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மின்னம்பல நேயர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

எண்ணங்கள் ஈடேறக்கூடிய ஆண்டு. அதேசமயம் எதிலும் நேரடி கவனமும் சோம்பல் இல்லா உழைப்பும் அவசியம். அலுவலகத்தில் நன்மைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் தவிருங்கள். பிறரைக் குறைகூறுவதும் கூடாது. திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும், பொறுமை முக்கியம். புதிய பதவிகளில் அலட்சியம் கூடாது.

வீட்டில் ஒற்றுமை இடம்பிடிக்கும். அதை வீண் ரோஷம், வெட்டிக் கோபத்தால் விரட்டிவிட வேண்டாம். உறவுகளிடம் பழைய கசப்பை பேசுவதைத் தவிருங்கள். வாரிசுகள் வாழ்வில் சுபதடைகள் நீங்கும். வரவு சீரானாலும் செலவுகளும் சேர்ந்து வரும். வீண் ஆடம்பரம் தவிருங்கள். கடன் தருவது, பெறுவதில் கவனம் தேவை.

செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் கிட்டும். அரசு வழி அனுமதிகளில் அலட்சியம் வேண்டாம். அரசியலில் இருப்போர்க்கு தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்படும். சகவாச தோஷத்தால் அதை இழக்க நேரிடலாம், கவனம். அரசுப்பணி புரிவோர், திறமைக்கு ஏற்ப உயர்வுகளை பெறுவீர்கள். பணியிடக் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கலைஞர்களும் படைப்பாளிகளும் சீரான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

சின்சியர் செயல்பாடு வளர்ச்சியைத் தொடர்ச்சியாக்கும். மாணவர்கள் எதிர்கால நன்மைக்கு இப்போதே உத்தரவாதம் கிட்டும். பயணப்பாதையில் பிறர் தரும் எதையும் உட்கொள்ள வேண்டாம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தாயார், கொடி மர கருடன் வழிபாடு, சிறப்பான நன்மை தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள்: கும்பம்!

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள்: மகரம்!

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : தனுசு!

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள்: விருச்சிகம்!

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள்: துலாம்!

லேசர் வெளிச்சத்தில் மின்னும் வள்ளுவர் சிலை… கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்

”சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி கொடுப்பேன்” : நீதிமன்றத்தில் ஆஜரான வருண்குமார் ஐபிஎஸ் உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share