-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மின்னம்பல நேயர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
மகரம்
அல்லல்கள் குறைந்து அனுகூலங்கள் அதிகரிக்கும் ஆண்டு. வீண் ரோஷமும் வேண்டாத தர்க்கமும் தவிர்த்தால், ஏற்றமும் மாற்றமும் தொடரும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகளுடன் கலந்துரையாடும் அளவுக்கு பேசப்படுவீர்கள். இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். சிலருக்குப் பலகாலக் கனவாக இருந்த பணிவாய்ப்பு தேடிவரும்.
உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. வீட்டில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். மனம்போல வீடு, மனை, வாகன வசதிகள் உண்டாகும். பழைய கடன்கள் பைசலாகும். பணவரவை சேமிக்கப் பழகுவது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அதீத நெருக்கம் வேண்டாம். பெற்றோர் உடல்நலத்தில் கவனம்செலுத்துங்கள். வாரிசுகளிடம் வீண்கண்டிப்பு தவிருங்கள். பெண்களுக்கு திடீர் யோகத்தால் பொருட் சேர்க்கை ஏற்படும்.
செய்யும் தொழிலில் சேதங்கள் நீங்கி, லாபங்கள் அதிகரிக்கும். பங்குவர்த்தகம், வீடு, மனை சார்ந்த தொழிலில் சீரான திட்டமிடல் முக்கியம். அரசியலில் உள்ளவர்களுக்கு திடீர் பதவி, பொறுப்புகளால் பெருமை சேரும். பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. யாருக்கும் வாக்குறுதிகள் எதுவும் தரவேண்டாம். அரசுப்பணியில் உள்ளோர் புதிய வாய்ப்புகளால் ஆதாயம் பெறுவீர்கள். எதிர்பால் நட்புகளிடம் நெருக்கம் தவிருங்கள். மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும்.
இரவுப் பயணம் எதையும் தொடங்கும் முன் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் காலம் கனிந்து வாய்ப்புகள் பெறுவீர்கள். நரம்பு, அடிவயிறு, முதுகு, கால்கள், தொடை, இடுப்பு உபாதைகள் வரலாம். விநாயகர், அனுமன் வழிபாடு, விசேஷ நன்மைகள் தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : தனுசு!
2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள்: விருச்சிகம்!
2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள்: துலாம்!
”சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி கொடுப்பேன்” : நீதிமன்றத்தில் ஆஜரான வருண்குமார் ஐபிஎஸ் உறுதி!
பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை : குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!