-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மின்னம்பல நேயர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
கடகம்
தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் ஆண்டு. மனதில் இருந்த இனம்புரியாத பயங்கள் நீங்கும். கவனச் சிதறல் தவிர்த்து கடமை உணர்ந்து செயல்பட்டால், உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற உயர்வுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் பொறுமைக்குப் பரிசாகக் கிட்டும். தொழிலில் உங்கள் உழைப்பே லாபத்தை ஈட்டும். கூட்டுத் தொழிலில் வீண் சந்தேகம் வேண்டாம். பங்குவர்த்தகத்தில் நிதானம் முக்கியம். அரசியலில் இருப்பவர்கள் அடக்கத்தால் அதீத நன்மை பெறலாம். பிறருக்கு ஜவாப், ஜாமீன் தருவதைத் தவிருங்கள். அரசாங்கத் துறையில் உள்ளோர் மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். புறம்பேசுவோரை புறக்கணியுங்கள். மாணவர்கள் மறதியை விரட்ட, தினம்தினம் படியுங்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். மாதாந்தர உபாதைகளில் அலட்சியம் வேண்டாம்.சினிமா, கலைத்துறையினர் முயற்சிகளால் முன்னேற்றம் காணலாம். சிற்றின்ப நாட்டம் தவிருங்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம். அஜீரணம், தூக்கமின்மை,அலர்ஜி, தலைவலி உபாதைகள் வரலாம். பஞ்சவடி அனுமன், ராகவேந்திர மகான் வழிபாடு, வாழ்வை வளமாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அண்ணா. பல்கலை மாணவி விவகாரம் : எஃப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி? – என்.ஐ.சி விளக்கம்!