2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள்: கும்பம்!

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மின்னம்பல நேயர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

கும்பம்

அமைதியாகச் செயல்பட்டால், அனைத்திலும் நன்மைகள் கிட்டும் ஆண்டு. எந்த சமயத்திலும் நிதானமும் திட்டமிடலும் முக்கியம். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு தொழில் நிரந்தரமாகி மகிழ்ச்சி சேர்க்கும். பல கால எதிர்பார்ப்புகளான ஊதியம், பதவி உயர்வு கிட்டும். உடனிருப்போருடன் வீண் தர்க்கம் வேண்டாம். திட்டமிடலும் நேரம் தவறாமையும் உயர்வுகளை உறுதியாக்கும். பண வரவில் இருந்த தடைகள் நீங்கும்.

இல்லத்தில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். விடியல் வெளிச்சம் வரும்போது அதை வார்த்தைகளால் விரட்டிவிட வேண்டாம். உறவுகளால் சகாயம் உண்டு. வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம். குலதெய்வத்தை தினமும் கும்பிடுங்கள். வரவை திட்டமிட்டுச் செலவிடுங்கள்.

தொழிலில் மேன்மையும் வளர்ச்சியும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் கூடாது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள். அரசியலில் உள்ளவர்கள் அடக்கத்துடன் இருப்பதே நல்லது. மேலிடத்துக்கு எதிரானவர்கள் நட்பு கனவிலும் வேண்டாம். அரசுப்பணி புரிபவர்கள் தொடர்ச்சியாக வளர்ச்சி பெறுவீர்கள். சட்டப்புறம்பு சகவாசம் சங்கடம் தரும் உடனே உதறுங்கள்.

பெண்களுக்கு பூர்வீக சொத்து சேரும். மகப்பேறு அமைய முறையான சிகிச்சைகள் உதவும். மாணவர்கள் மறதியை உடனே  விரட்டுங்கள். கலைஞர்கள், சினிமாத்துறையினர் கவனத்தை ஒருநிலைப்படுத்துங்கள். வீண் ரோஷம் தவிருங்கள்.

வாகனத்தில் பழுதிருப்பின் உடனே கவனியுங்கள். ஒற்றைத் தலைவலி, சுவாசக் கோளாறுகள், அடிவயிறு உபாதை, ரத்த அழுத்த மாற்றம் வரலாம். சிவன்-பார்வதி, பெருமாள்-தாயார் வழிபாடு சீரான நன்மை தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள்: மகரம்!

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : தனுசு!

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள்: விருச்சிகம்!

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள்: துலாம்!

லேசர் வெளிச்சத்தில் மின்னும் வள்ளுவர் சிலை… கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்

”சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி கொடுப்பேன்” : நீதிமன்றத்தில் ஆஜரான வருண்குமார் ஐபிஎஸ் உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share