-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மின்னம்பல நேயர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
விருச்சிகம்
உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரக்கூடிய வருடம். அலட்சியமும் அவசரமும் தவிர்த்தால், அனைத்திலும் நன்மையே கிட்டும். பணியிடத்தில் உங்கள் பெருமை உயரும். மேலதிகாரிகள் ஆதரவினால் பதவி,ஊதியம் உயரப்பெறுவீர்கள். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த இடமாற்றம் கைகூடும். புதிய பணிவாய்ப்பு எதிர்ப்பார்ப்பு போல் கூடிவரும். அயல்நாட்டுப் பயண வாய்ப்பு சிலருக்கு உண்டு. பணி சார்ந்த பயணங்கள் அதிகரித்தாலும் ஆதாயம் தரும். பிறர் குறை பேசுவதை அறவே தவிருங்கள். இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும். இளம்வயதினரின் பலகால கனவுகள் ஈடேறும். உடல்நலத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். ஆடை, ஆபரணம், சொத்து சேரும். மூன்றாம் நபரை குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். தொழிலில் லாபம் சீராக வரத்தொடங்கும். அயல்நாட்டு வர்த்தகம் கைகூடும். யாருடைய கட்டாயத்திற்காகவும் தெரியாத தொழிலில் முதலீடு செய்யவேண்டாம். அரசியலில் இருப்பவர்களுக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் உண்டு. சிலருக்கு புதிய பதவி, பொறுப்புகளால் பெருமை உண்டாகும். அரசுப்பணி செய்பவர்கள் முன்னேற்றத் தடைகள் நீங்கிடும். பயணத்தில் கோப்புகள் பத்திரம். பெண்களுக்கு பணவரவு அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை உண்டு. மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம். கலை, படைப்புத் துறையினர் முயற்சிகளால் முன்னேறலாம். பழைய உறவுகளை உதாசீனப்படுத்த வேண்டாம். வாகனம் ஓட்டுவோர்க்கு போதுமான ஓய்வு முக்கியம். தலைவலி, கண்கள், பாதம், இடுப்பு, மூட்டு, உணவு செரியாமை உபாதைகள் வரலாம். முருகன், துர்க்கை வழிபாடு முன்னேற்றம் தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பெருஞ்சிலைகளை விஞ்சிய பேரறிவுச் சிலை!
3 மாவட்டங்களில் கனமழை: வானிலை அப்டேட்!