மொய்தாம்கள் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு !

Published On:

| By Minnambalam Login1

current affairs tamil unesco

அசாம் மாநிலத்தின் அஹோம் வம்சத்தின் மொய்தாம்களை (புதைமேடுகள்) இந்தியாவின் 43-வது உலக பாராம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவித்துள்ளது. புதுடெல்லியில்  நடந்த 46-வது உலக பாரம்பரிய குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த மொய்தாம்கள் இந்தியாவின் பிரமிடுகள் என்று அழைக்கப்படுவதும் உண்டு. current affairs tamil unesco 

  • 2023-24- ஆம் ஆண்டுகான யுனஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலுக்கு இந்தியாவின் சார்பில் மொய்தாம்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
  • இந்த அறிவிப்பின் மூலம் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெறும் வடகிழக்கு இந்தியாவின் முதல் கலாச்சாரச் சின்னம் இதுவாகும்.

மொய்தாம்கள் என்றால் என்ன ? current affairs tamil unesco 

  • மொய்தாம்கள் என்பது அசாமின் அஹோம் வம்சத்தின் மன்னர்கள் மகாராணிகள் பிரபுக்களின் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். மொய்தாம் என்ற வார்த்தை தாய் வார்த்தைகளான பிராங்-மை-தாம் அல்லது மை-தாம் என்பதில் இருந்து வந்தது.
  • இதற்கு ‘அடக்கம்’ அல்லது ‘ஆவி’ என்பது பொருள்.

மொய்தாம்களில் இருப்பது என்ன ?

  • அசாமில் உள்ள ஒவ்வொரு மொய்தாம்களும் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.

அவை:

  • உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டகம் அல்லது அறை,
  • அறையை உள்ளடக்கிய அரைகோள மண்மேடு.
  • வருடாந்திர வழிபாட்டுக்காக மேலே ஒரு செங்கல் அமைப்பு (சாவ் சாலி) மற்றும் எண்கோண வடிவத்துடன் கூடிய எல்லைச் சுவர்.
  • இறந்தவர்களின் அந்தஸ்து மற்றும் வளங்களைப் பொறுத்து அவர்களைப் புதைக்கும் இடமானது சிறு மேடுகள் முதல் சிறிய குன்றுகளாக இருக்கின்றன.
  • இவை முதலில் பெட்டகங்கள் மரத்தூண்கள் மற்றும் விட்டங்களால் உருவாக்கப்பட்டன. பின்னர், ருத்ர சிங்கா மன்னரால் அவை (CE 1696-1714) கல் மற்றும் செங்கல்களால் அமைக்கப்பட்டன.

மொய்தாம் கலாச்சாரத்தின் தோற்றமும் முடிவும்:

  • அசாமை ஆண்ட முதல் அஹோம் மன்னன் சாவு-லுங்க் சிவு-கா-பாவுடன் இந்த மொய்தாம் புதைமேடு பாரம்பரியம் தொடங்கியது.
  • அவர் தை -அஹோம் முறைப்படி சாரெய்டியோவில் புதைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து அஹோம் வம்சத்தின் இந்த வழக்கத்தினைத் தொடர்ந்தனர்.
  • அவர்களின் 600 ஆண்டு கால ஆட்சியில் சாரெய்டியோ ஒரு புனித தளமாக மாறியது. காலப்போக்கில் இந்து மதத்தின் தாக்கத்தால் அஹோம்கள் இறந்தவர்களின் உடல்களை எரிக்கத் தொடங்கினர்.
  • என்றாலும் மொய்தாம் அடக்க முறை இன்றும் சில மதகுருமார் குழுக்கள் மற்றும் சாயோ -தாங் க்ளான்களால் (அரசனின் மெய்காப்பாளர்கள்) பின்பற்றப்படுகிறது.

மாணவர்களுக்கான குறிப்பு:

1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. வரலாறு சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-பூஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

புதிய வருமான வரி அடுக்குகளில் திருத்தம்!

யூனியன் பட்ஜெட்-பூர்வோதயா திட்டம் என்றால் என்ன?

நிபா நோய்த்தொற்றால் சிறுவன் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share