தேசியச் சராசரியைவிடத் தமிழ்நாடு முன்னிலை!

Published On:

| By Minnambalam Login1

current affairs tamil tamilnadu

நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டின் (Sustainable Development Goal Index) பதின்மூன்று இலக்குகளில் தமிழ்நாடு ‘முன்னிலை’ பிரிவில் இருக்கிறது என  நிதி ஆயோக்கின்(NITI Aayog) சமீபத்திய நிலையான வளர்ச்சி இலக்குகள்-இந்தியா குறியீடு(Sustainable Development Goals India Index) அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. current affairs tamil tamilnadu

இது  நிதி ஆயோக் வெளியிட்டிருக்கும் நான்காவது குறியீடு. அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பிறகு, இந்தக் குறியீடு தயார் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த  நிதி ஆயோக்கின் அறிக்கை, மாநிலங்களின் செயல்திறனை, மதிப்பெண்களின் அடிப்படையில் நான்காகப் பிரிக்கிறது. அவை, ‘ஆசைப்படுவர்’ (0-49), ‘செய்பவர்’ (50-64), ‘முன்னோடி’ (65-99) மற்றும் ‘சாதனையாளர்’ (100).

எல்லா மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, மொத்தமாக எடைபோட்டதில் தமிழ்நாடு எழுபத்தெட்டு மதிப்பெண்கள் பெற்று, மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்று இந்த அறிக்கை சொல்கிறது. நமது தேசிய சராசரி மதிப்பெண் எழுபத்து ஒன்று.

ADVERTISEMENT

தமிழ்நாடு பதின்மூன்று நிலையான வளர்ச்சி இலக்குகள் பொறுத்தவரை, ‘முன்னோடி’ என்ற பிரிவிலும், சுத்தமான மற்றும் மலிவான ஆற்றலுக்கான இலக்கை பொறுத்தவரை ‘சாதனையாளர்’ பிரிவில் இருக்கிறது.

பாலினச் சமத்துவம் மற்றும் தண்ணீருக்கு அடியில் உள்ள வாழ்க்கை இலக்குகளில் தமிழ்நாடு ‘செய்பவர்’ பிரிவில் உள்ளது. ஆனால் நிலையான நகரங்கள், சமூகங்கள் மற்றும் நிலத்தில் உள்ள வாழ்க்கை இலக்குகள் பொறுத்தவரை தேசியச் சராசரியை விட கீழே உள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிக்கையின்படி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.

சில புள்ளிவிவரங்கள்: current affairs tamil tamilnadu

பல்பரிமாண வறுமை குறியீட்டின் (Multidimensional Poverty Index) படி, தமிழ்நாட்டில் 2.2% சதவீத மக்கள்தான் வறுமையில் உள்ளனர். இதுவே தேசிய அளவில் 14.96% மக்கள் வறுமையில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் மகப்பேறு காலத்தில் நிகழும் தாய்மார்களின் மரணங்கள் (Maternal Mortality Ratio) 54 ஆகவும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை மரணங்கள் (Under Five Mortality Ratio) 13 ஆகவும் இருக்கிறது. இதுவும் தேசியச் சராசரியைவிடக் குறைவு.

தமிழ்நாடு அரசு மனித வளங்களைத் தொடர்ந்து மேம்படுத்திவருகிறது என்றும். நான் முதல்வன், புதுமைப் பெண், தாயுமானவர் திட்டம் போன்றவை கல்வி மற்றும் சமூக துறைகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று தமிழ்நாட்டின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறைக்காக வேலை செய்யும் ஓர் ஆலோசகர் கூறினார்.

மாணவர்களுக்கான குறிப்பு :

  •  TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
  •  சமூக மேம்பாடு சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தி தொகுப்பு TNPSC மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

கடும் வெப்பத்தால் பாதிப்பிற்குள்ளாகும் பெண்கள்!

உலகின் மிக அரிதான திமிங்கலம்!

டிரம்ப் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் முறை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share