இந்தியப் பொருளாதார அமைப்பு ஸ்திரமாக உள்ளதாகவும், அட்டவணை வங்கிகளின் மொத்த வருவாய் ஈட்டாத சொத்துகள் (Non Performing Assets)கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த தடவை மிகவும் குறைந்து, 2.8 சதவீதம்தான் உள்ளது என்று இந்திய ரிசரவ் வங்கியின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. current affairs in tamil NPA
வங்கிகளின் வருவாய் ஈட்டாத சொத்துகள்(Non Performing Assets) என்றால் என்ன? current affairs in tamil NPA
- வங்கிகள் மக்கள் மற்றும் தொழில்களுக்குக் கடன் வழங்குகின்றன. அப்படி வழங்கப்பட்ட கடன்களைத் திரும்பப் பெறும்பொழுது வட்டியும் வாங்கப்படுகின்றன. இந்த வட்டிதான் வங்கிகளின் வருவாயில் பெரும்பங்கு வகிக்கின்றன.
- கடன்கள் வங்கிகளின் இருப்பு நிலை குறிப்பில்(Balance Sheet) சொத்துகளாக குறிப்பிடப்படும்.
- கடன் பெற்றவர்கள் வட்டியை தொண்ணூறு நாள்களுக்குச் செலுத்தாத பட்சத்தில், அந்த கடன்கள் வருவாய் ஈட்டாத சொத்துகள் என்று வங்கியின் இருப்பு நிலையில் குறிக்கப்படும்.
வருவாய் ஈட்டாத சொத்துகள் எப்படி வகைப் படுத்தப்படுகிறது:
தரக்குறைவான சொத்துகள்:(Substandard Asset)
இச்சொத்துகள் இதே நிலையில் பன்னிரண்டு மாதங்கள் வரை நீடித்தால், அவை தரக்குறைவான சொத்துகள் என்று இருப்புக் குறிப்பில் குறிக்கப்படும்.
சந்தேகத்திற்குரிய சொத்துகள்:(Doubtful Asset)
தரக்குறைவான சொத்து அதே நிலையில் பன்னிரண்டு மாதங்கள் நீடித்தால், அவை சந்தேகத்திற்குரிய சொத்தாக இருப்புக் குறிப்பில் குறிக்கப்படும்.
இழப்பு சொத்து(Loss Asset)
வட்டி நிச்சயமாக வராது என்கிற பட்சத்தில் அவை இழப்பு சொத்து என்று இருப்புக் குறிப்பில் குறிக்கப்படும்.
வருவாய் ஈட்டாத சொத்துகளுக்காகப் பண வைப்பு நிதி(NPA Provisioning):
வருவாய் ஈட்டாத சொத்துகளால் வங்கிகளுக்குப் பாதிப்பு ஏற்படும். இதை ஈடுகட்ட கடன் கொடுத்த அளவிற்கு நிகரான பணத்தை வங்கிகள் ஒதுக்கி வைக்க வேண்டும். இதைத் தான் வருவாய் ஈட்டாத சொத்துகளுக்கான பண வைப்பு நிதி(NPA Provisioning) என்று சொல்லப்படுகிறது.
மொத்த வருவாய் ஈட்டாத சொத்து விகிதம்(Gross NPA Ratio):
வங்கியின் மொத்த சொத்துகளில் இந்த வருவாய் ஈட்டாத சொத்துகள் எவ்வளவு இருக்கிறது என்பதை மொத்த வருவாய் ஈட்டாத சொத்து விகிதம் என்று சொல்லப்படும்
பாதிப்புகள்:
- இந்த வருவாய் ஈட்டாத சொத்துகளால் வங்கிகளுக்குக் கடன் வழங்குவதில் பாதிப்பு நிகழும். ஏன் என்றால், பண இருப்பு இருந்தால்தான் வங்கிகள் கடன் வழங்கமுடியும்.
- இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
- மொத்த வருவாய் ஈட்டாத சொத்து விகிதம் மிகக் குறைவாக இருப்பது பொருளாதாரத்திற்கு நல்லது.
மாணவர்களுக்கான குறிப்பு:
- UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group 2 மற்றும் Group 1 Prelimsக்கு உதவும்.
- பொருளாதார சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….