அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்

Published On:

| By Minnambalam Login1

current affairs tamil New criminal law

அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம் current affairs tamil New criminal law 

டிசம்பர் 25, 2023 அன்று, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் “பாரதிய நியாய சன்ஹிதா 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023” மற்றும் “பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம், 2023” ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்தார். current affairs tamil New criminal law 

ஜூலை 1 முதல், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நடைமுறைக்கு வரும், இந்தச் சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்து இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றியமைக்கும் .

பாரதீய நியாய சன்ஹிதா என்பது இந்திய குடியரசின் அதிகாரப்பூர்வ குற்றவியல் கோட் ஆகும். (CODE சட்டங்களின் முறையான தொகுப்பு)
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BNSS) என்பது குற்றவியல் நடைமுறை தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைத்து திருத்துவதற்கான ஒரு சட்டமாகும்.
பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம், நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் சாட்சியங்ககளை தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் சட்டமாகும்.

1) புதிய குற்றவியல் சட்டங்களின் சில முக்கிய சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது .மின்னணு முறைகள் மூலம் , குற்றக் காட்சியின் ஒலிப்பதிவு(கட்டாயமானது), ஆன்லைனில் போலீஸ் புகார்களை பதிவு செய்தல் மற்றும் ஜீரோ எஃப்ஐஆர்.(ZERO FIR) எந்தவொரு காவல் நிலையத்திலும் புகார்களை பதிவு செய்ய அனுமதிக்கின்றது, இது சட்ட நடவடிக்கையை எளிதாக்குகிறது.

2) தொழில்நுட்ப முன்னேற்றங்கள்: ஆன்லைன் போலீஸ் புகார்கள் மற்றும் மின்னணு சேவை ஆகியவை ஆவணங்களை குறைத்து தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,

3) சரியான நேரத்தில் நீதி வழங்குவதை வலியுறுத்தும்விதமாக 45 நாட்களுக்குள் விசாரணை தீர்ப்புகளை வழங்குவதற்கான கடுமையான காலவரை மற்றும் 60 நாட்களுக்குள் குற்றம் சாட்டப்பட்ட(அல்லது)சந்தேகத்திற்குட்பட்ட நபரை விசாரணைக்கு ஆஜார்ப்படுத்துதல்,

4) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் , புரிதலுடன் கையாளுதல் மற்றும் விரைவான மருத்துவ பரிசோதனைகளை மற்றும் சிகிச்சை (தேவைப்பட்டால்)உறுதி செய்தல்,

 

5)வளர்ந்து வரும் குற்றங்கள்: பயங்கரவாதத்தில் சேர்க்கப்படும் குற்றங்கள், திருமணத்திற்கான மோசடி வாக்குறுதிகள் மற்றும் சிறார்களைக் கூட்டுப் பலாத்காரம் செய்தல் போன்ற வளர்ந்து வரும் குற்றங்களும் இதில் அடங்கும்.

Notes for Aspirants:
1. UPSC Civil Service GS-1 & GS-3 தாள்களுக்கும் மற்றும் கட்டுரை எழுதவதற்க்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அறிவியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

-வர்ஷா செல்வச்சந்திரன் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

நிலக்கரி வாயுவாக்கம் என்றால்?

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம்

இந்தியாவின் முதல் குடிமகன் யார் ?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share