ஏழாவது அட்டவணையின் முக்கியத்துவம்!!!

Published On:

| By Minnambalam Login1

current affairs tamil seventh schedule

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான நீட் தேர்வு, அரசியல் தளத்தில் மத்தியப் பட்டியலில் உள்ள ‘கல்வி’ குறித்தான விவாதங்களை மீண்டும் தொடக்கி வைத்துள்ளது. current affairs tamil seventh schedule

இதை முழுதாகப் புரிந்துகொள்வதற்கு நாம் நமது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஏழாவது அட்டவணை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். current affairs tamil seventh schedule

இந்திய அரசியல் அமைப்பின் வரலாறு:

  • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தைந்தாம் ஆண்டு கொண்டு வந்த சட்டம்தான் “இந்திய அரசாங்கச் சட்டம் 1935”
  • இந்தச் சட்டத்தில்தான் முதல் முறையாகச் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் பிரித்துக்குடுக்க ப்பட்டது. கூட்டாட்சி முறையை முதல் முறையாகக் கொண்டு வந்தது இச்சட்டம் எனலாம்.
  • நமது அரசியல் அமைப்பின் பெரும் பகுதி இச்சட்டத்திலிருந்து எடுக்கப் பட்டதுதான்.

ஏழாவது அட்டவணை:

  • நமது அரசியல் அமைப்பு பன்னிரண்டு அட்டவணைகள், இருபத்து ஐந்து பகுதிகள், நானூற்று நாற்பத்து ஒன்பது சட்டப்பிரிவுகளால் ஆனது.
  • ஏழாவது அட்டவணையில்தான் மத்திய, மாநில, மற்றும் பொதுப் பட்டியல்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.
  • அரசியல் சட்டப்பிரிவு இருநூற்று நாற்பத்து ஆறு (246) தான் மேற்க்குறிப்பிட்டுள்ள பட்டியல்களின் உள்ளடக்கத்தை முடிவு செய்கிறது. இந்தப் பட்டியல்களில் ஏதாவது திருத்தம் கொண்டுவரவேண்டுமானால் இந்த சட்டப்பிரிவைத் திருத்த வேண்டும்.
  • ஒன்றிய அரசாங்கத்திற்கு, மத்தியப் பட்டியலில் உள்ள தலைப்புகள் சம்பந்தமான சட்டம் ஏற்றும் அதிகாரம் உள்ளது.
  • மாநில அரசாங்கங்களுக்கு, மாநில பட்டியலில் உள்ள தலைப்புகள் சம்பந்தமான சட்டம் ஏற்றும் அதிகாரம் உள்ளது.
  • பொதுப்பட்டியலில் உள்ள தலைப்புகள் சம்பந்தமாகச் சட்டம் இயற்றும் அதிகாரம், மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கத்திற்கும் உள்ளது. ஆனால் எதாவது முரண்பாடு ஏற்பட்டால், மத்திய அரசாங்கம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது.
  • மத்தியப் பட்டியலில் தொன்னுற்று ஏழு தலைப்புகளும், மாநில பட்டியலில் அறுபத்து ஆறு தலைப்புகளும், பொதுப் பட்டியலில் நாற்பத்து ஏழு தலைப்புகளும் தற்போது உள்ளன.

கல்வி எந்தப் பட்டியலில் இருந்தது, இப்பொழுது எங்குள்ளது?

  • ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து ஐந்தாம் வருடம் வரை கல்வி, மாநில பட்டியலில் இருந்தது.
  • ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து ஐந்தாம் வருடம், மத்தியில் இருந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, அவசர நிலையை பிரகடனப் படுத்தியது. இந்தக் காலத்தில், அரசியலமைப்பை திருத்துவதற்கு ஸ்வரன் சிங் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
  • இந்த குழுவின் பரிந்துரைபடி, ‘கல்வி’, ‘காடு’, ‘எடைகள் மற்றும் அளவுகள்’, ‘காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் பாதுகாப்பு’ மற்றும் ‘நீதி நிர்வாகம்’ தலைப்புகளை மாநில பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலிற்கு மாற்றியது காங்கிரஸ் அரசாங்கம்.

விளைவுகள்:

  • கல்வி என்ற தலைப்பை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதின் விளைவாக மாநில அரசுகளின் அதிகாரங்கள் சுருக்கப்பட்டுவிட்டன.
  • மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட், மத்திய பல்கலைகழங்க்களுக்கான நுழைவுத் தேர்வான சி.யு.இ.டி (CUET) போன்றவை ‘கல்வி’ பொதுப் பட்டியலில் உள்ளதால் வந்த விளைவுகள்.
  • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களும் வெவ்வேறு வளர்ச்சி நிலையில் உள்ளன. ஒவ்வொரு மாநிலங்களின் கல்வி தேவைகளும் அதற்கேற்றவாறு வேறுபடும்.
  • இந்தியா முழுக்க ஒரே தேர்வு என்ற முடிவு மாணவர்களின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்கும்.
  • கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவருவது மாணவர்களுக்கும், மனித வளத்தை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று மாநிலங்கள் பல ஆண்டுகளாகக் கூறிவருகின்றன.

மாணவர்களுக்கான குறிப்பு:

  1. UPSC Civil Service GS-2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
  2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group 2 மற்றும் Group 1 Prelimsக்கு உதவும்.
  3. அரசியலமைப்பு சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம்

ஜூன் 29: தேசிய புள்ளியியல் தினம்.

நிலக்கரி வாயுவாக்கம் என்றால்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share