வெள்ளை அறிக்கை என்றால் என்ன?congress demand white paper
- பொதுவாக எதிர்க்கட்சிகள், ஆளும்கட்சிக்கு எதிராக கேள்வியெழுப்பும் போது வெள்ளை அறிக்கையை முன்வைக்குமாறு கேட்பது வழக்கம்.
- அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படும் தெளிவான, துல்லியமான மற்றும் அதிகாரப் பூர்வமான அறிக்கை ஆகும். .congress demand white paper
- வெள்ளை அறிக்கை, அரசாங்க கொள்கையைப் பற்றி மக்களுக்கு ஒரு புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கு உதவும்.
- எந்த விஷயத்தில் ஒரு புரிதல் இல்லையோ அரசிடம் இருந்து ஒரு தெளிவு இல்லையோ அப்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் அதுகுறித்து அரசிடம் வெள்ளை அறிக்கையை முன்வைக்குமாறு கேட்பது வழக்கம்.
- பெரும்பாலும் அரசு வைத்திருக்கும் தரவுகள்தான் புள்ளி விவரங்களாக வெள்ளை அறிக்கையில் இடம் பெறுகின்றன. எந்தெந்த வகையில் எவ்வளவு வருவாய் உள்ளது, செலவு எவ்வளவு, கடன் எவ்வளவு என்பதைத் திட்டமிடுவது போன்று நாட்டின் நிலையை விளக்குவதுதான் இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கம்.இன்னும் அரசு எவ்வளவு கடன் வாங்கலாம், எந்தெந்த வகையில் வருவாயை உயர்த்தலாம் என வரும் நாள்களில் வெள்ளை அறிக்கையை வைத்து சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்.
- இதற்குமுன், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள்,ஆட்சியின் போது வெள்ளை அறிக்கை வெளியானது , அதற்கு பிறகு இந்த முறை திமுக பதவிக்கு வந்தபோது வெளியிட்டது.
- புது தில்லியில், வியாழக்கிழமை, அக்னிபத் திட்டம் குறித்து, பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் வழங்கிய தகவல் முழுமையாக இல்லை எனவும் இது ஒரு குழப்பமான சூழ்நிலையை உண்டாக்குகிறது, அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு காங்கிரஸ் கேட்டுக்கொண்டது .
- பாராளுமன்றத்தில், பாதுகாப்பு துறை அமைச்சர் திரு . ராஜ்நாத் சிங் ,இழப்பீடு குறித்து அவர் வழங்கிய தகவல் முழுமையானது இல்லை எனவும் இது குறித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கிறார்கள் .
- அக்னிபத் திட்டத்தின் கீழ் வரும் வீர்ரகள் மற்றும் மற்ற வீரர்கள் இடையே பாரபட்சத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அரசியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-வர்ஷா செல்வச்சந்திரன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்