தமிழகத்தை உலுக்கிய கடலூர் ரயில் விபத்து விசாரணையில் ஆடியோ ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது. Cuddalore train accident
கடந்த ஜூலை 8 ஆம் தேதி, கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பயணிகள் ரயில் மோதியதில் தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தின் போது பணியில் இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, “பள்ளி வேன் ஓட்டுநர் திறக்க சொல்லி அவசரப்படுத்தியதாக் கேட்டை திறந்துவிட்டேன்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர், “நான் கேட்டை திறக்க சொல்லவில்லை. ஏற்கனவே திறந்திருந்ததால் தான், தண்டவாளத்தை கடக்க முயன்றேன். அங்கு கேட் கீப்பரே இல்லை” என்று பேட்டி அளித்தார்.
இந்நிலையில் கடலூர் ரயில் விபத்து விசாரணையில், விசாரணை அதிகாரிகளுக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
விபத்து நடந்த அன்று முதலில் ஸ்டேஷன் மாஸ்டரிடம் பேசிய கேட் கீப்பர், கேட் மூடப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் விபத்து நடந்த பின்னர் ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டை மூடமால் விட்டுவிட்டேன் என்று கூறியிருக்கிறார். ரயில்வே குரல் பதிவு கருவியில் இந்த உரையாடல் பதிவாகியுள்ளது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாக தி இந்து ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.
இதன்மூலம் பள்ளி வேன் ஓட்டுநர் தான் கேட்டை திறக்க சொன்னார் என்று கேட் கீப்பர் கூறியது பொய் என தெரியவந்துள்ளது. Cuddalore train accident
