கிச்சன் கீர்த்தனா: வெள்ளரி மின்ட் சால்ட் லஸ்ஸி!

Published On:

| By admin

கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கத்தால் சிறுநீர் துவாரங்களில் ஏற்படக்கூடிய அரிப்பு, வலி போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது வெள்ளரி. வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றையும் போக்கக்கூடிய வெள்ளரியில் புதினா சேர்த்து சுவையான லஸ்ஸி செய்து அருந்துங்கள். கோடையைக் குளுமையாக்குங்கள்.

என்ன தேவை?

  • வெள்ளரிக்காய் – 2 (தோல் சீவி, துருவவும்)
  • புதினா இலைகள் – கால் கப்
  • தயிர் – ஒரு கப்
  • தோல் சீவிய இஞ்சி – அரை இஞ்ச் அளவு
  • கறுப்பு உப்பு – கால் டீஸ்பூன்
  • சீரகத்தூள் – சிட்டிகை
  • எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெள்ளரித் துருவலுடன் புதினா, தயிர், இஞ்சி, கறுப்பு உப்பு, சீரகத்தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து வடிகட்டவும். மேலே ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share