ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடரின் அட்டவணை இன்று (பிப்ரவரி 22) வெளியாகியிருக்கிறது. முன்னதாக 15 போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும் என கூறப்பட்டது. தற்போது முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

அதன்படி முதல் போட்டியில் வழக்கம்போல சென்னை அணி களமிறங்க பெங்களூர் அணி எதிர்த்து ஆடுகிறது. மார்ச் 22-ம் தேதி மாலை 6.3௦ மணியளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழாவில், சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கோப்பையை எடுத்து வந்து ஒப்படைப்பார்.

இதையடுத்து தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதும். அட்டவணையின்படி முதல் 21 போட்டிகளில் சென்னை அணி 4 போட்டிகளில் விளையாடுகிறது.
THALA. 🦁
CHENNAI. 🏟️
YELLOVE. 💛
The Forever Emotion is back! 🥳
🗓️ : March 22, 2024 #SummerOf24 pic.twitter.com/7GlIKO1MRm— Chennai Super Kings (@ChennaiIPL) February 22, 2024
அதன்படி 26-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னையில் சந்திக்கிறது. தொடர்ந்து மார்ச் 31-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியை விசாகப்பட்டினத்திலும், ஏப்ரல் 5-ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஹைதராபாத்திலும் சந்திக்கிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குஜராத்திற்கு விழுந்த அடுத்த அடி… காயத்தால் விலகிய நட்சத்திர வீரர்!
