CSK VS RR உத்தேச ஆடும் 11 வீரர்கள்!

Published On:

| By Jegadeesh

ஐபிஎல் போட்டிகளின் 16 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று (ஏப்ரல் 12) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ADVERTISEMENT

இரு அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதற்கு முன்னதாக நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதே போன்று மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

இதன் மூலமாக இரு அணிகளுமே சம பலத்துடன் இருக்கின்றன.

இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேராக 26 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 15 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 11 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

சேப்பாக்கம் மைதானம்:

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இங்கு 160 முதல் 180 ரன்கள் அடித்தாலே அது சவாலான ஸ்கோராக இருக்கும்.

ஆனால், இதற்கு முன்னதாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 217 ரன்கள் எடுத்தது.

2ஆவதாக ஆடிய லக்னோ அணி 205 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதில், சென்னை அணியில் மொயீன் அலி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் கைப்பறினர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்யலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச ஆடும் 11 வீரர்கள்

டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், அஜிங்க்ய ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்‌ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே.

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச ஆடும் 11 வீரர்கள்

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், த்ருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜேசன் ஹோல்டன், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சகால்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” : ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம்!

10.5% இட ஒதுக்கீடு தாமதம்: பாமக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு!

CSK VS RR dream 11 Players
Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share