ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பாஃப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடரில் இதுவரை 31 ஆட்டங்கள் சென்னை-பெங்களூரு அணிகள் நேருக்கு நேராக மோதியுள்ளன. இதில் 2௦ முறை சென்னை அணியும், பெங்களூரு அணி 1௦ முறையும் மோதியுள்ளன. 1 போட்டிக்கு முடிவில்லை.
சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரை ஒரே ஒருமுறை மட்டுமே சென்னை அணியை, பெங்களூரு அணி வென்றுள்ளது. இதனால் இந்த களங்கத்தை துடைக்க வேண்டும் என பெங்களூரு அணியும், வெற்றிவாய்ப்பினை தக்கவைத்திட வேண்டும் என சென்னை அணியும் இன்று களமிறங்கி உள்ளன.
CSK vs RCB: பரபரப்புக்கு பஞ்சமே இல்ல… சமூக வலைதளங்களில் ‘பறக்கும்’ மீம்ஸ்கள்!
இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பெங்களூரு கேப்டன் பாஃப் டூ பிளசிஸ் தற்போது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து தற்போது பெங்களூரு அணியின் ஓபனிங் வீரர்களாக விராட் கோலி, கேப்டன் டூ பிளசிஸ் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
சென்னை அணி சமீர் ரிஸ்வி, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், முஸ்தாபிசுர் ரஹ்மான் என நான்கு பேருக்கு முதல் போட்டியில் வாய்ப்பு அளித்துள்ளது.
IPL 2024: அதிக வெற்றியை பெற்ற கேப்டன் யார்…?
சென்னை சூப்பர் கிங்ஸ்:-
1. ருத்துராஜ் கெய்க்வாட் (கேப்டன்) 2. ரச்சின் ரவீந்திரா 3.அஜிங்கியா ரஹானே 4.டேரில் மிட்செல் 5.ரவீந்திர ஜடேஜா 6.தோனி (விக்கெட் கீப்பர்) 7. சமீர் ரிஷ்வி 8.தீபக் சாஹர் 9.மதீஷா தீக்ஷனா 10. துஷார் தேஷ்பாண்டே 11.முஸ்தாபிசுர் ரஹ்மான் .
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:-
1. பாஃப் டூ பிளசிஸ் (கேப்டன்) 2. விராட் கோலி 3. கேமரூன் கிரீன் 4.ரஜத் படிதார் 5. கிளென் மேக்ஸ்வெல் 6.தினேஷ் கார்த்திக் 7. அங்கித் ராவத் (விக்கெட் கீப்பர்) 8. மயங்க் டாகர் 9. அல்சரரி ஜோசப் 1௦.முஹமது சிராஜ் 11.கரண் ஷர்மா.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி: பாமக வேட்பாளர் மாற்றம்!
Gopura Vasalile: கார்த்திக் – பானுப்ரியாவின் ‘கல்ட் கிளாசிக்’ திரைப்படம்!
IPL 2024: ”எல்லாம் மாறும்” புது கேப்டனுக்காக வீடியோ வெளியிட்ட CSK