ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. csk ticket sales demand decrease
இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது சிஎஸ்கே. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
சென்னை அணி தனது சொந்த மைதானத்தில் ஆடும் போது, டிக்கெட்டே கிடைக்காது. அந்த அளவுக்கு டிக்கெட் மிகவும் கிராக்கியாக இருக்கும்.

ஆனால், சென்னை அணியின் தொடர் தோல்வியால் டிக்கெட் வாங்க ரசிகர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். முன்னதாக, காலை 10.15 மணிக்கெல்லாம் டிக்கெட் விற்பனை தொடங்கும் நிலையில், சில நிமிடங்களில் டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிடும்.
ஆனால், ஏப்ரல் 30-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள பஞ்சாப், சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு இன்று காலை 10.15 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், இன்னும் டிக்கெட் விற்கப்படாமல் உள்ளது. இதனால் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் ஃபேன்ஸ் சிஎஸ்கே ரசிகர்களை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். csk ticket sales demand decrease









