பேட்டில் தோனி ஒட்டிய ‘ஸ்டிக்கர்’ செம வைரல்… சென்டிமெண்ட் காரணமா?

Published On:

| By Manjula

சென்னை அணியின் கேப்டன் தோனி தற்போது தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த சீசனுடன் மொத்தமாக தோனி கிரிக்கெட்டில் இருந்து விலக இருக்கிறார் என்பதால், கடைசி தொடரை வெற்றிகரமாக முடிக்க தோனி கடும் முயற்சிகளை எடுத்து வருகிறார்.

ADVERTISEMENT

அதன் வெளிப்பாடு தான் மினி ஏலத்தில் எதிர்பாராத வீரர்களை சென்னை அணி எடுப்பதற்கு காரணமாக இருந்தது.

ADVERTISEMENT

வருகின்ற மார்ச் 22-ம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூர் அணிகள் மோதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ராஞ்சியில் தன்னுடைய கிரிக்கெட் பயிற்சியை ஆரம்பித்து இருக்கும் தோனி தன்னுடைய பேட்டில் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

ADVERTISEMENT

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ”இதற்கு பின்னால் எதுவும் செண்டிமெண்ட் இருக்கிறதா?”, என்று கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது அதன் பின்னணி தெரிய வந்துள்ளது. ‘தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் தோனியின் முதல் பேட்டிற்கு ஸ்பான்சர் வாங்கிட அவரது நண்பர் கடும் முயற்சிகள் மேற்கொள்வார்.

அந்த காட்சிகள் படத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காட்டப்பட்டு இருக்கும். அந்த சிறுவயது நண்பர் தற்போது ஸ்போர்ட்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகத்தான், தோனி தன்னுடைய பேட்டில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ்(Prime Sports) என ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள்,”உண்மையான நட்பிற்கு தோனி ஒரு சிறந்த உதாரணம்”, என மனதார அவரைப் பாராட்டி வருகின்றனர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாமாயிலுக்கு பதில் கடலை எண்ணெய்: விவசாயிகள் வலியுறுத்தல்!

வெளிநாட்டு முதலீடுகள்: வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா ஸ்டாலின்? – எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share