குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. csk set the highest score in ipl 2025
புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் சென்னை அணியும், முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 25) மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது. இது நடப்பு சீசனில் சென்னை அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராக பதிவானது.
அந்த அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் டிவால்ட் பிரெவிஸ் 23 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் (57) அடித்தார். கான்வே 2 சிக்சர்கள், 6 பவுண்டரியுடன் 52 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் குஜராத் அணி 11 ஓவர்களில் 86 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறி வருகிறது.
