இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய U19 அணியை பிசிசிஐ இன்று (மே 22) அறிவித்துள்ளது. csk player leads India U19 for Tour of England
ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளது.
அதனையொட்டி வரும் ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை இரு நாடுகள் இடையேயான U19 தொடரும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் 50 ஓவர் பயிற்சி போட்டி, அதைத் தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட இளைஞர் ஒருநாள் தொடர் மற்றும் இங்கிலாந்து U19 அணிக்கு எதிரான இரண்டு நாள் போட்டிகள் இடம்பெறும்.

இந்த நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் U19 அணியை ஜூனியர் கிரிக்கெட் குழு இன்று தேர்வு செய்துள்ளது.
இதில் சென்னை அணியின் தொடக்க வீரரான ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான 14 வயது சூர்யவன்ஷியும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய U19 அணி விவரம் :
:ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ராவ்னா படேல், யுதாவ்னா படேல், ஹென்ட், முகமது எனான், ஆதித்யா ராணா, அன்மோல்ஜீத் சிங்
காத்திருப்பு வீரர்கள்: நமன் புஷ்பக், டி தீபேஷ், வேதாந்த் திரிவேதி, விகல்ப் திவாரி, அலங்கிரித் ரபோல் (விக்கெட் கீப்பர்)