அதே இலக்கு… அதே தோல்வி… ஹாட்ரிக் தோல்வியுடன் தள்ளாடும் சிஎஸ்கே

Published On:

| By christopher

csk lost to dc by 25 runs and get a hattrick loss

டெல்லி அணியை தனது சொந்த மைதானத்தில் எதிர்கொண்ட சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. csk lost to dc by 25 runs and get a hattrick loss

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை இன்று (ஏப்ரல் 5) மாலை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் ஜேக்கை முதல் ஓவரிலேயே டக் அவுட் செய்து வெளியேற்றினார் கலீல்.

எனினும் மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல், சென்னை அணியின் பந்துவீச்சை பவுண்டரியும், சிக்ஸருமாய் பறக்கவிட்டு அரைசதம் (77) கடந்தார்.

அவருக்கு உறுதுணையாக அபிஷேக் போரல் (33), அக்சர் படேல் (21), சமீர் ரிஸ்வி (20) மற்றும் ஸ்டப்ஸ் (24) அதிரடியாக ரன் குவித்தனர்.

இதன்மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக கலீல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக ரச்சின் ரவீந்திரா (3), கேப்டன் ருத்துராஜ் (5) மற்றும் கான்வே (13) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன்பின்னர் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய ஷிவம் துபே (15) எந்த இம்பேக்ட்டும் ஏற்படுத்தாமல் பெவிலியன் திரும்ப, ஜடேஜாவும் (2) வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார்.

74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 6வது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் மற்றும் தோனியும் பொறுப்புடன் பொறுமையாக ஆடினர்.

ஆனால் அவர்களின் பேட்டிங்கால் அணியின் ஸ்கோர் உயர்ந்ததே தவிர, வெற்றி இலக்கை எட்டவில்லை. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. விஜய் சங்கர் (69) மற்றும் தோனி (30) கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இதன்மூலம் பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி என நடப்புத் தொடரில் ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ளது சென்னை அணி. அதே வேளையில் ஹாட்ரிக் வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.csk lost to dc by 25 runs and get a hattrick loss

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share