சென்னையில் மத்திய அரசு வேலை: மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம்… விஞ்ஞானி ஆகத் தயாரா? உடனே விண்ணப்பியுங்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

CSIR-SERC scientists recruitment

“ஆராய்ச்சித் துறையில் சாதிக்க வேண்டும், அதுவும் மத்திய அரசு வேலையில், கைநிறையச் சம்பளத்துடன் செட்டில் ஆக வேண்டும்” என்று துடிக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு, இதோ ஒரு ஜாக்பாட் செய்தி.

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் முக்கிய ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர் – ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் ரிசர்ச் சென்டரில் (CSIR-SERC) காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

பொதுவாகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வரும் விஞ்ஞானி பணியிடங்கள், இம்முறை கொத்துக்கொத்தாக 30 இடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, இன்ஜினியரிங் முடித்தவர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு ‘கோல்டன் சான்ஸ்’ என்றே சொல்லலாம்.

காலியிடங்கள் விவரம்:

ADVERTISEMENT

மொத்தம் 30 விஞ்ஞானி (Scientist) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் சார்ந்த முக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்கள்.

ADVERTISEMENT

யாருக்கெல்லாம் வாய்ப்பு?

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, பொறியியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • கல்வித் தகுதி: ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் (Structural Engineering), அப்ளைடு மெக்கானிக்ஸ் (Applied Mechanics), ஜியோ-டெக்னாலஜி, ஓஷன் இன்ஜினியரிங் போன்ற பிரிவுகளில் எம்.இ (M.E) அல்லது எம்.டெக் (M.Tech) முடித்திருக்க வேண்டும்.
  • இத்துடன் சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருப்பதும் அவசியம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 22.12.2025 தேதியின்படி, 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு).

சம்பளம் எவ்வளவு?

இது ஒரு உயர் அதிகாரி அந்தஸ்திலான பணி என்பதால், சம்பளத்திற்குப் பஞ்சமிருக்காது. ஊதிய நிலை-11 (Pay Level-11) படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • அடிப்படை ஊதியம்: ரூ.67,700 முதல் தொடங்கும்.
  • அதிகபட்சம்: ரூ.2,08,700 வரை சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும். தொடக்கத்திலேயே அனைத்துப் படிகளையும் சேர்த்தால் மாதம் ரூ.1 லட்சத்தைத் தாண்டிச் சம்பளம் கைக்கு வரும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு பற்றிய அறிவிப்பு எதுவும் தற்போதைக்கு இல்லை.

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ளவர்கள் https://serc.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் ஒபிசி ஆண்களுக்கு: ரூ.500.
  • பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

முக்கிய தேதி:

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 22.12.2025.

காலக்கெடு முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால், தகுதியுள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இன்றே விண்ணப்பித்து விடுவது நல்லது. சென்னையில் வேலை, மத்திய அரசுப் பணி, கவுரவமான பதவி – இப்படி ஒரு பேக்கேஜ் மீண்டும் கிடைப்பது அரிது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share