2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான SDPI கட்சியின் சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹலான் பாகவி தலைமையில் இன்று சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் S.M ரபீக் அஹமது, நெல்லை முபாரக், அம்ஜத் பாஷா, மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, அப்துல் சத்தார், உஸ்மான் கான், ரத்தினம் மற்றும் மாநில பொருளாளர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். திமுகவுடன் இருந்த SDPI கட்சி, தொகுதி உடன்பாடு காணப்படாததால் மாநில செயற்குழு 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று தீர்மானித்ததை அடுத்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, வேட்பாளர்கள் யார் என்பது பற்றி விரிவாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இறுதியில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது என்றும் அவற்றில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். தமிழக மக்கள் SDPI கட்சியை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.