தெருநாய் வாலில் பட்டாசு… இரு மிருகங்களுக்கு வலை வீச்சு!

Published On:

| By Kumaresan M

உலகெங்கும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை, தலைநகர் சென்னையில் பட்டாசு விபத்தில் சிக்கி  300 க்கும் மேற்பட்டவர்கள்  காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒருசில பித்தம் பிடித்த இளைஞர்கள், வாயில்லாத ஜீவன்களை  பட்டாசுகளை கொண்டு வதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலத்தில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த  வீடியோ ஒன்றில், இளைஞர் நாயின் வாலில் பொறி வைத்து மத்தாப்பு வெடியை பத்த வைத்தார். தீப்பொறி பறந்ததும், அந்த நாய் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளவர்கள், இளைஞருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டாவும், வீடியோவில் உள்ள இளைஞர்கள் பற்றி  அறிந்தால்  தகவலை பகிர கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் மற்றும் அந்த இளைஞர்கள் பற்றியும்  விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக சத்தத்துடன் வெடிகள் வெடிக்கப்படுவதால், வீட்டு செல்லப்பிராணிகளான நாய்கள், தெருநாய்கள் உள்ளிட்டவை ஒரு வித பயத்துடனேயே இந்த நாட்களில் காணப்படும். இந்த சமயத்தில் இந்த பிராணிகள் கடும் மன அழுத்தத்துக்குள்ளாவது உண்டு.

ஆனால், அவற்றின் மனநிலை , இயலாமையை அறிந்து கொள்ளாத மிருக குணம் கொண்ட சில இளைஞர்கள் வாயில்லாத பிராணிகளுக்கு தீங்கிழைப்பதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். இவர்களை பிடித்து கடும் தண்டனை கொடுக்க வேண்டுமென்பதுதான் விலங்கின ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

டெல்லியில் தலயை பார்த்தாச்சு… சென்னையில் மஞ்சள் சட்டை ரெடியாச்சு!

“மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் நவம்பர் 1”: ஸ்டாலின்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share