காஷ்மீர் தாக்குதல் : ஆயிரக்கணக்கில் வேலையிழப்பு… கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிப்பு!

Published On:

| By Minnambalam Desk

crores of Business affected after Kashmir attack

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால் அப்பாவி பொதுமக்கள் 28 பேர் உயிரிழந்தனர். crores of Business affected after Kashmir attack

இந்த தாக்குதலின் எதிரொலியாக நேற்று இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஆலோசகர்களுக்கு ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் போன்ற ஐந்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தக தொடர்பையும் நிறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையாலும் அட்டாரி எல்லை மூடப்பட்டதாலும் கிட்டத்தட்ட 3800 கோடி மதிப்புள்ள வர்த்தகம் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் பொருட்களுக்கு இந்தியா 200% வரியை விதித்ததிலிருந்து இரு தரப்பு வர்த்தகம் ஏற்கனவே சரிவில் இருந்ததாக இந்திய நிலை துறைமுக ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன.

அதிகாரப்பூர்வ தரவுகளின் படி இந்தியாவிலிருந்து சோயாபீன், கோழித்தீவனம், காய்கறிகள், சிவப்பு மிளகாய், பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் பிளாஸ்டிக் நூல் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து முந்திரி, பாதாம் போன்ற உலர் பழங்கள், பேரிச்சம்பழம், ஜிப்சம், சிமெண்ட், கண்ணாடி, கல் உப்பு மற்றும் மூலிகைகள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்கிறது.

இந்த இறக்குமதியானது அட்டாரியில் உள்ள நிலத்துறைமுகத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் 1யின் (NH 1) வழியாக வருவதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.

கடந்த காலங்களில் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்களால் அட்டாரி எல்லை வழியாக வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக புல்வாமா தாக்குதலுக்கு முன்பு 2018-19 ஆம் ஆண்டுகளில் ரூ 4,370 கோடியாக இருந்த இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த 2022-23 ஆம் ஆண்டில் ரூ 2,257 கோடியாக குறைந்தது.

இருப்பினும் 2023-24 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் ரூ 3,886 கோடியாக மீண்டும் உயர்ந்தது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வர்த்தகமாகும்.

டாலர் மதிப்பில் பார்த்தோம் என்றால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் இந்தியா பாகிஸ்தான் வர்த்தகம் ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர்களாக சுருங்கியுள்ளது.

அட்டாரி எல்லையை மூடியதால் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

அட்டாரி எல்லை வழியாக இந்தியா பாகிஸ்தான் வர்த்தகம் பஞ்சாபில் குறிப்பாக அமிர்தசரஸ் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் அட்டாதியிலும் ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார சூழலை உருவாக்கியுள்ளது என்று வர்த்தக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் சுமை தூக்குபவர்கள் கடைக்காரர்கள் மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு இந்த நடவடிக்கையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக வாகாட்டரி வழியாக இந்தியா பஞ்சாபில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களில் வைக்கோல் அறுவடை செய்பவர்கள் மற்றும் பருத்தி ஆகியவையும் அடங்கும்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறிய அளவிலான அலகுகளால் தயாரிக்கப்படும் வைக்கோல் அறுவடை செய்பவர்கள் பட்டாரிலுள்ள ஐசிபி(ICP) வழியாக பாகிஸ்தானுக்கு குறிப்பிடத்தக்க ஏற்றுமதியை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share