பயிர்க்கடனை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்: சிபிஐ !

By Kavi

|

Published on 26 May 2026, 8:31 PM

ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில், ரூ.50,000 வரை கடன் பெற்றிருக்கும் குறு விவசாயிகளுக்கு முழுவதுமாக (100%) கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. ரூ.50,000 வரை கடன் பெற்றிருக்கும் சிறு விவசாயிகளுக்கு, அவர்களின் கடன் தொகையில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்’ என வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், “விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு முதல்வர் விஜய், விவசாயிகள் சாகுபடி செலவின வகைக்காக கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன்களில் ரூ.50 ஆயிரம் வரையான கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என நேற்று அறிவித்துள்ளார். இது தலைமுறை, தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது.

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்” என வழங்கியுள்ள உறுதி மொழிக்கும் மாறானது.

ADVERTISEMENT

இதுவரை விவசாயிகளுக்கான கடன் நிவாரணம் சாகுபடி நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டதாகவே வழங்கப்பட்டது. இந்த வழிமுறையை மாற்றி “பண மதிப்பை” அடிப்படையாகக் கொண்டு வகுத்துள்ள புதிய முறையும் ஏற்கதக்கதல்ல.

ஏனெனில், மாவட்டத்துக்கு மாவட்டம், பயிருக்கு பயிர் சாகுபடிச் செலவுகள் மாறுபடும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

இதனை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்து, மறு உத்தரவு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, முதல்வரை கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel