பலரின் விருப்ப உணவான ஸ்நாக்ஸ் வகைகளை கடைகளில் வாங்குவதென்றால் காஸ்ட்லி. ஆனால், அதன் செய்முறையைத் தெரிந்துகொண்டால் இவ்வளவுதானா என்பீர்கள். இந்த மதுர் தட்டை ரெசிப்பியும் அந்தவகையைச் சேர்ந்ததுதான். ஒரு மாதம் வரை கெடாது இந்த தட்டை அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
வறுத்த ரவை, வறுத்த மைதா – தலா ஒரு கப்
அரிசி மாவு – ஒரு கப்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும்.
சிறிய நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து, சின்ன தட்டையாக தட்டவும். மீதமிருக்கும் இருக்கும் மாவு முழுவதையும் தட்டை வடிவத்துக்கு தட்டி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், தட்டைகளைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சில்லி சாஸுடன் பரிமாறவும்.
குறிப்பு: மெல்லியதாகத் தட்டினால் நன்றாக, கரகரப்பாக இருக்கும்.