தமிழகத்தில் குற்றச் செயல்கள் குறைவு : லிஸ்ட் வெளியிட்ட அரசு!

Published On:

| By Kavi

தமிழகத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று  தமிழக அரசு தெரிவித்துள்ளது.    Crime rate is low in Tamil Nadu

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் விமர்சித்து வருகிறார். 

இந்த நிலையில் இன்று (மார்ச் 6) தமிழ்நாடு அரசு குற்றச் செயல்கள் தொடர்பான ஒரு லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. 

அதில், 

 சொத்துக்கு எதிரான குற்றங்கள் Crime rate is low in Tamil Nadu

2023-ம் ஆண்டில் பதிவான ஆதாயக்கொலை வழக்குகளின் எண்ணிக்கை 83 ஆக இருந்தது. அதேசமயம் 2024-ம் ஆண்டில் இது 75 வழக்குகளாகும். இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024-ம் ஆண்டில் 8 வழக்குகள் (10 சதவீதம்) குறைந்துள்ளன. இதேபோல், 2023-ம் ஆண்டில் பதிவான கூட்டுக்கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 133 ஆகவும்.\, 2024-ம் ஆண்டில் 110 வழக்குகளாகவும் உள்ளது.

2023-ம் ஆண்டில் பதிவான கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 2,212 ஆகவும், 2024-ம் ஆண்டில் 1,839 வழக்குகளாகவும் உள்ளது. இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024-ல் கூட்டுக்கொள்ளை மற்றும் கொள்ளை வழக்குகள் இரண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு (இரண்டிலும் 17 சதவீதம்) குறைந்துள்ளது. இதேபோல், 2023-ம் ஆண்டை (17,788) ஒப்பிடும்போது 2024-ல் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை (15892 வழக்குகள்) குறிப்பிடத்தக்க அளவு (10.65 சதவீதம்) குறைந்துள்ளது.

சட்டம்-ஒழுங்கு Crime rate is low in Tamil Nadu

2023-ம் ஆண்டில் உடலுக்கு எதிரான குற்றங்களில் (கொலை, கொலை முயற்சி, கொலை கொலையாத மரணம், காயம்) 49,286 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2024-ம் ஆண்டில் இது 31,497 ஆகும். இதனால் 2023 உடன் ஒப்பிடும்போது 2024-ம் ஆண்டில் 17,789 வழக்குகள் (36.12 சதவீதம்) குறைந்துள்ளன. குறிப்பாக, 2023 உடன் ஒப்பிடும்போது 2024-ல் கொலைகள் 110 வழக்குகள் (6.8 சதவீதம் குறைப்பு). குறைந்துள்ளன

2023 ஆம் ஆண்டில் பதிவான கலவர வழக்குகளின் எண்ணிக்கை 1305 ஆகவும், 2024-ம் ஆண்டில் 1,229 வழக்குகளாகவும் உள்ளது. இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024-ல் 76 வழக்குகள் (5.8 சதவீதம்) குறைந்துள்ளன.

ரவுடிகள் அடையாளம் Crime rate is low in Tamil Nadu

 ரவுடிகள் தலைமறைவாகி, அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் நிலுவையில் இருந்தால், வாரண்டில் உள்ள ஜாமீன்தாரர்கள் மீது நடவடிக்கை எடுத்தல். கடந்த 2023-ம் ஆண்டில் 1, 2024-ம் ஆண்டில் 21 ஜாமீன்தாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரவடி கும்பல்கள்/ போட்டி கும்பல்கள் இடையே கொலைகளைத் தடுக்க, முந்தைய பழிவாங்கும் மற்றும் பகைமை கொண்ட கும்பல்கள் மற்றும் போட்டி கும்பல்களின் பட்டியல் தயார் செய்து தீவிரமாக கண்காணித்தல். கடந்த 2023-ம் ஆண்டில் 110 கொலை வழக்குகளும் 2024-ம் ஆண்டில் 63 வழக்குகளும் பதிவாகின, இது 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024-ம் ஆண்டில் 47 வழக்குகள் (42.72 %) குறைந்துள்ளன.

அமைதியை உறுதி செய்தல் Crime rate is low in Tamil Nadu

 தடுப்புக்காவல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் 3694 சமூக விரோதிகளும், 2024 ஆம் ஆண்டில் 4572 சமூக விரோதிகளும் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கொலைகள், உடலுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ரவுடி தொடர்பான வன்முறைகளை தடுப்பதற்காக முறையான. தரவுகளின் அடிப்படையிலான மற்றும் பல்துறை அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு காவல்துறையின் இத்தகைய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, 2024-ம் ஆண்டில் சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. குறிப்பாக கொலை மற்றும் ஆதாயக் கொலை ஆகியவை குறைந்துள்ளன. இது சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், மாநிலத்தில் அமைதியை உறுதி செய்வதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  Crime rate is low in Tamil Nadu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share