2028 ஒலிம்பிக் திருவிழாவில் ‘கிரிக்கெட்’: வெளியான சூப்பர் தகவல்!

Published On:

| By Monisha

cricket in los angels 2028 olympic

ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள், வரும் 2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்றவுள்ளது. அதை தொடர்ந்து, 34வது ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ம் ஆண்டு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த 2028 ஒலிம்பிக் திருவிழாவில் கிரிக்கெட்டும் ஒரு போட்டியாக இடம்பெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் LA28 அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“கிரிக்கெட், பேஸ் பால்/சாஃப்ட் பால், ஃபிளாக் கால்பந்து, ஸ்குவாஷ் மற்றும் லேக்ரோஸ் ஆகிய 5 விளையாட்டுகளை, 2028 ஒலிம்பிக் போட்டிகளில் புதிய விளையாட்டுகளாக இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த பரிந்துரைகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த 5 விளையாட்டுகளை 2028 ஒலிம்பிக்கில் இணைப்பது குறித்த இறுதி முடிவு,

வரும் அக்டோபர் 12 முதல் 14 வரை மும்பையில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் LA28 தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த பரிந்துரை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி,

“லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில், கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க ஒருங்கிணைப்பாளர்கள் பரிந்துரைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “LA28 ஒருங்கிணைப்பாளர்களுடன் தொடர்ந்து 2 வருடங்களாக பணியாற்றியதன் மூலம், கிரிக்கெட் விளையாட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முடிவுக்காக மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்”, என குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், 1900ம் ஆண்டுக்கு பிறகு, 128 ஆண்டுகளுக்கு பின், கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறவுள்ளது.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கன்வின்ஸ் செய்த பிக்பாஸ்: உறுதியாக இருந்த பவா

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா!

ஹமாஸ் பாலஸ்தீனத்தின் பிரதிநிதி அல்ல… இஸ்ரேலுக்கு முழு ஆதரவு: அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கூட்டறிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share